பாஜகவின் தேசிய தலைவர் கடந்த மார்ச் மாதம் வெளியாக இருந்த நிலையில் அடுத்தடுத்து பகல்ஹாம் தாக்குதல், சிந்தூர் ஆபரேஷன் போன்ற விவகாரங்களால் பாஜக தேசிய தலைவர் தேர்வு தள்ளி சென்றது. இந்த நிலையில் தற்பொழுது பாஜக தேசிய தலைவர்களை முடிவு செய்வதில் ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜகவுக்கு இடையில் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
இதில் தற்பொழுது அடுத்த பாஜக தேசிய தலைவர் யார் என்ற பட்டியலில், சிவராஜ் சிங் சவுகான, வீ டி சர்மா, ராஜ்நாத் சிங், மனோகர்லால் கட்டர், பூபேந்திர யாதவ், தர்மேந்திர பிரதான் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்று இருந்தது. இந்த நிலையில் இவர்களில் யாரை தேர்வு செய்வதில் என்பதில் தொடர்ந்து ஆர் எஸ் எஸ் – பாஜக இடையில் பேச்சுவார்த்தை இழுபறியாகவே நீடித்து வந்தது.

குறிப்பாக பாஜக அரசு இந்துத்துவா கொள்கையை இன்னும் ஆழமாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை என்கின்ற அதிருப்தி ஆர் எஸ் எஸ் பக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. அதே போன்று துறை ரீதியாக ஆர்எஸ்எஸ் தலையிடுவதை பிரதமர் மோடி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இப்படி ஆர் எஸ் எஸ் க்கும் பாஜகவுக்கும் இடையிலான ஆரோக்கியமான விவாதம் ஒரு பக்கம் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சிவராஜ் சிங் சௌவான் பெயர் பாஜக தேசிய தலைவராக வருவதற்கு அதிக வாய்ப்பு இருந்த நிலையில், அவருடைய பெயரும் பல்வேறு காரணங்களால் தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, இந்த நிலையில் ஆர் எஸ் எஸ் மற்றும் அமித்ஷா, மோடி இவர்கள் ஒருமித்தமாக ராஜ்நாத் சிங்கை தேசிய தலைவராக கொண்டு வருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
காரணம் ஆர்எஸ்எஸ் மற்றும் மோடி இவர்களுக்கு இடையிலேயும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இடையில் ராஜ்நாத் சிங்கின் அணுகுமுறை சரியாக இருக்கும் என்று ஆர் எஸ் எஸ், பிரதமர் மோடி, அமித்ஷா உட்பட பாஜகவினர் கருதுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் பிரதமர் மோடி பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஒரு பெண் தலைவரை பாஜகவின் தேசிய தலைவராக கொண்டு வருவதற்கு விருப்பம் தெரிவித்ததாகவும் ஆனால் அதை ஆர்எஸ்எஸ் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த நிலையில் பாஜகவின் தேசிய தலைவராக ராஜ் நாத் சிங்யை முடிவு செய்துவிட்டதாகவும், அவருக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் டெல்லி வட்டாரங்கள் உறுதிப்படுத்துகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி ஐந்து நாள் பயணமாக வெளிநாடு செல்ல இருப்பதால், அந்த பயணத்தை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய பின்பு பாஜகவின் தேசிய தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள் என்கிறது டெல்லி வட்டாரங்கள்.
தேசிய தலைவர் தேர்வின் போது, தேசிய அளவில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா இருவரும் தெரிவித்ததை ஆர்எஸ்எஸ் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. அதாவது தேசிய தலைவராக ராஜ்நாத் சிங் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு, அதில் தேசிய நிர்வாகதில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை ஆர்எஸ்எஸ் ஏற்றுக் கொண்டதாகவும்,
அந்த வகையில் ஏற்கனவே அமித்ஷா அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று உறுதி அளித்த நிலையில், குறிப்பாக தேசிய பொதுச்செயலாளராக ஏற்கனவே அண்ணாமலையை அமித்ஷா தேர்ந்தெடுத்து நிலையில், ராஜ்நாத் சிங் தேசிய தலைவராக பொறுப்பேற்ற பின்பு, அண்ணாமலைக்கு தேசிய பொதுச்செயலாளர் பதவி உறுதியாக வழங்கப்படும் என்றும், தற்போது தேசிய நிர்வாக பட்டியலில் அண்ணாமலை பெயரும் இடம்பெற்றுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் உறுதிப்படுத்துகிறது.

