தேசிய அளவில் பாஜகவில் பல்வேறு மாற்றங்கள் அடுத்தடுத்து நிகழ இருக்கிறது. இதில் பாஜக கட்சிக்குள்ளும் , அமைச்சரவையில் பல மாற்றங்கள் நிகழ இருப்பதை டெல்லி வட்டாரங்கள் உறுதி படுத்துகிறது. குறிப்பாக தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அடுத்து என்ன பொறுப்பு வழங்க பட இருக்கிறது என்கிற பரபரப்பு நீடித்து வருகிறது. அந்த வகையில் அண்ணாமலை குறித்து டெல்லியில் இருந்து பல தகவல் வெளியாகி இருக்கிறது.
தற்பொழுது வெளிநாடு சுற்று பயணம் மேற்கொள்ள இருக்கும் பிரதமர் மோடி, இந்தியா திரும்பியதும் பாஜக தேசிய தலைவர் அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாக இருக்கிறது. அதற்கான பேச்சு வார்த்தை சமீபத்தில் ஆர் எஸ் எஸ் மற்றும் பிரதமர் மோடி , அமித்ஷா இடையில் நடைபெற்று இருக்கிறது. பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு பாஜக தேசிய தலைவராக ராஜ்நாத் சிங் முடிவு செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் உறுதி படுத்துகிறது.

இந்நிலையில் ராஜ்நாத் சிங் பாஜக தேசிய தலைவராக பொறுப்பேற்க்க இருப்பதால், பாஜக விதிப்படி அமைச்சராக தொடரமுடியாது அதனால் அவருடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என கூறப்படுகிறது. மேலும் உத்தரகண்ட் முதல்வரை டெல்லி அரசியலுக்கு கொண்டு வருவதர்க்கு பாஜக திட்டமிட்டுள்ளதால் அவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் பெரிய மாற்றம் இருக்காது, 3 அமைச்சர்கள் மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் அண்ணாமலை மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவாரா என டெல்லி வட்டாரத்தில் விசாரித்ததில், கடந்த 2024ல் பிரதமர் மூன்றாவது முறை பிரதமராக பொறுப்பேற்ற போதே, அண்ணாமலை க்கு மத்திய அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்பு வந்தது.
ஆனால் அவர் தமிழக அரசியலில் தனக்கு விருப்பம் என்று தெரிவித்து விட்டதால், அமைச்சரவையில் அண்ணாமலை இடம் பெறவில்லை. அந்த வகையில் தற்பொழுது நடைபெற இருக்கும் அமைச்சரவை மாற்றத்திலும் அண்ணாமலை இடம்பெற மாட்டார் என உறுதி படுத்துகிறது டெல்லி வட்டாரங்கள். இந்நிலையில் அடுத்த தலைமுறைக்கான பாஜக தலைவர்கள் யார் என்கிற டாப் 10 பெயர் கொண்ட பட்டியல் அமித்ஷா தேர்வு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
அதில், அனுராக் தாகூர், தேவேந்திர பட்னாவிஸ், யோகி ஆதித்யநாத், சஞ்சய் பண்டி, தேஜஸ்வி சூர்யா ஆகியோர் அடங்கிய டாப் 10 பேர் கொண்ட பட்டியலில் அண்ணாமலை பெயரும் இடம்பெற்றுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் உறுதி படுத்துகிறது. அதாவது 2034க்கு பாஜகவை வழிநடத்தி செல்ல கூடிய அடுத்தகட்ட தலைவர்களை அடையாளம் கண்டு அவர்களை முன்னிறுத்த தான் இந்த பட்டியலை அமித்ஷா ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள அண்ணாமலைக்கு, தேசிய தலைவராக ராஜ்நாத் சிங் பொறுப்பேற்றதும், அவருக்கு கீழ் உள்ள தேசிய நிர்வாகதில் தேசிய பொதுச் செயலாளர் பொறுப்பை அண்ணாமலைக்கு வழங்க அமித்ஷா முடிவு செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தேசிய பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கி தென் மாநிலங்களின் உள்ள தமிழக உட்பட மேலும் சில மாநிலங்களின் பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்க படலாம் என கூறப்படுகிறது.
அந்த வகையில் பிரதமர் மோடி சமீபத்தில் வெளிநாடு செல்ல இருப்பதால், அவருடைய வெளிநாடு பயணம் முடித்துவிட்டு இந்தியா திரும்பியதும், பாஜக தேசிய தலைவராக ராஜ்நாத் சிங் நியமிக்கப்பட்ட பின்பு, தேசிய நிர்வாக பட்டியலில் தேசிய பொதுச் செயலாளராக அண்ணாமலை நியமிக்க படுவார் என உறுதி படுத்துகிறது டெல்லி வட்டாரங்கள்.

