தமிழக அரசியலில் முன்னாள் முதல்வராக இருந்த ஜெயலலிதா – கருணாநிதி மறைவுக்குப் பின்பு இருந்த வெற்றிடத்தை நிரப்ப தலைவர் இல்லாமல் தத்தளித்து கொண்டிருந்த தமிழக அரசியலில், அந்த தலைவருக்கான வெற்றிடத்தை நிரப்பியவர் அண்ணாமலை. அந்த வகையில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு திமுகவை எதிர்த்து அரசியல் செய்ய சரியான தலைவர் இல்லாமல் தேடிக்கொண்டிருந்த திமுகவின் எதிர்ப்பாளர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து அவர்கள் மனதில் இடம் பிடித்தவர் அண்ணாமலை.
குறிப்பாக தமிழக பாஜகவை வரலாற்றை எழுத வேண்டுமென்றால் அண்ணாமலைக்கு முன் அண்ணாமலைக்குப் பின் என்றுதான் எழுத வேண்டும், நோட்டா கட்சி என்று பேசியவர்கள் மத்தியில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையில் தனித்து கூட்டணி அமைத்து 11% வாக்குகளை நிரூபித்து காட்டியவர் அண்ணாமலை, பல இடங்களில் பாஜக இரண்டாம் இடத்தில் இடம் பிடிக்க காரணமாக இருந்தவர் அண்ணாமலை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் அண்ணாமலைக்கு தேவையான பேர், புகழ் எல்லாமே கடந்த 4 வருடங்களில் அவர் தமிழக அரசியல் களத்தில் ஆடிய ஆட்டமே அவருக்கு மிகப் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பெற்று தந்து விட்டது. இந்த நிலையில் வரும் 2026 சட்டசபை தேர்தலில் அண்ணாமலையின் ரோல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் வகையில், தற்பொழுது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக அரசியல் வியூகங்களை வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜக தலைவராக மாற்றம் செய்யப்பட்ட பின்பு அண்ணாமலைக்கு என்ன பொறுப்பு என்ற பரபரப்பு நீடித்து வந்த நிலையில், தற்போது அவர் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட இருக்கிறார் என்பதை டெல்லி வட்டாரங்கள் அழுத்தம் திருத்தமாக உறுதி செய்து விட்டது. குறிப்பாக இந்தியா முழுவதும் அண்ணாமலையை தமிழகத்தின் முகமாக முன்னிலை படுத்தவும்,
அதே நேரத்தில் திமுகவை எதிர்த்து தமிழகத்தில் மட்டும் அரசியல் செய்து தமிழக மக்கள் மத்தியில், எப்படி திமுகவின் முகத்திரையை கிழித்து அண்ணாமலை வெளிச்சம் போட்டு காட்டினாரோ, அதே போன்று தேசிய அளவில் திமுக வின் முகத்திரையை கிழித்து வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்பதற்காக தான் தமிழகத்தின் முகமாக அண்ணாமலையை முன்னிறுத்த, அண்ணாமலைக்கு தேசிய பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்க அமித்ஷா முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் வரும் 20206 சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அண்ணாமலைக்கு மிக பெரிய ரோல் காத்துக்கொண்டிருக்கிறது என்கிறது டெல்லி வட்டாரங்கள், கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் 11% வாக்குகளை வாங்கிய பாஜக மீண்டும் 11% வாக்குகளுக்கு குறையாமல் பெற வேண்டும் என்றால் குறைந்தது 2026ல் பாஜக 45 தொகுதிகளாவது போட்டியிட வேண்டும் என்றும் அதிகபட்சம் 60 இலிருந்து 70 தொகுதிகளாவது பாஜக போட்டியிட வேண்டும்.
அப்படி போட்டியிட்டால் மட்டுமே கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெற்ற 11% வாக்கு வங்கியை மீண்டும் நிரூபிக்க முடியும் என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் சுமார் 20 மாநிலங்களை ஆட்சி செய்யும், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி போன்ற பாஜக தலைவர்களுக்கு கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் 11 சதவீத வாக்கு வங்கியை நிரூபித்த பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியாதா என்று தெரிவிக்கும் டெல்லி வட்டாரங்கள்.
அந்த வகையில் வரும் 2026 தேர்தலில் ஒரு தரப்பினர் தெரிவிப்பது போன்று பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடும் 25 தொகுதிகளில் போட்டியிடும் என்பதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை. அவர்கள் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் நிச்சயம் பாஜக பெற்று போட்டியிடும் என்று உறுதிப்படுத்துகிறது டெல்லி வட்டாரங்கள்.

