2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அதே கூட்டணியில் தொடருமா.? அல்லது வேறு கூட்டணிக்கு தவுமா.? என்கிற பரபரப்பு நீடித்து வருகிறது. அதற்கேற்றாற் போல், திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன், வைகோ, கம்யூனிட்ஸ்ட் கட்சிகள் திமுக தலைமைக்கு இப்போது இருந்தே அதிக சீட் கேட்டு அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணிக்கு சென்று விடுவோம் என திருமா, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் திமுகவிடம் பூச்சாண்டி காட்டி, 2019 நாடாளுமன்ற தேர்தலில் வாங்கிய அதே தொகுதியை பெற்று போட்டியிட்டு, திமுக மீது சவாரி செய்து வெற்றி பெற்றது. அந்த வகையில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியை குறைக்க வேண்டும் என்கிற திமுகவின் திட்டம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி ஆனதை தொடர்ந்து, அதிமுக பக்கம் திருமாவளவன் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்பொழுது நடிகர் விஜய் பக்கம் சென்று விடுவோம் என திமுகவை மிரட்டி அதிக தொகுதியை பெற்று விட வேண்டும் என்கிற வகையில் தொடர்ந்தும் திமுகவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார் திருமாவளவன்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் திருமாவளவன் பேசிய பேச்சு திமுக தலைமையை கதி கலங்க செய்துள்ளது. அதில் எத்தனை தொகுதிகளில் போட்டியிட போகிறீர்கள் என்று திரும்பத் திரும்ப எங்களை கேட்கிறார்கள். எங்களுக்கு டீ, பன் கொடுத்து இனி ஏமாற்ற முடியாது. ‘ஆறு முதல் எட்டு சீட்டுகள் கொடுத்தோம், அதற்கு மேல் அவர்களுக்கு சீட்டு கொடுக்க மாட்டோம், அதிகபட்சமாக 10 சீட்டுகளுக்கு மேல் தரமாட்டோம்’ என்று மதிப்பீடு செய்திருந்தால், அந்த மதிப்பீட்டை மாற்றிக்கொள்ளுங்கள் என பேசிய திருமாவளவன்.
மேலும், “நாங்கள் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்குத் தகுதியானவர்கள். இதை நான் ஆணவத்தில் சொல்லவில்லை. தேர்தல் கணக்கில் சொல்லவில்லை. சமூக மாற்றத்திற்கான அடிப்படை பார்வையில் சொல்கிறேன் என திருமாவளவனின் இந்தப் பேச்சு, திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திவிட்டது என்பதை தெளிவாக காட்டுகிறது.
அதே நேரத்தில் கடந்த 2026 சட்டசபை தேர்தலில் திமுக தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது திருமா , வைகோ, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்று சேர்ந்து விஜயகாந்தை முன்னிறுத்தி அமைத்த மக்கள் நல கூட்டணி தான், அதே போன்று விஜய் உடன் திருமா, வைகோ, கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்று விட்டால் திமுக வாக்குகள் பிரிந்து திமுக தோல்வியை தழுவும், என்கிற ஒரு திட்டத்தில் திருமாவளவன் திமுக கூட்டணிக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் திருமாவளவன் சலசலப்புக்கு இனி இங்கே வேலை இல்லை என திட்டவட்டமாக முடிவு செய்த திமுக தலைமை, திருமாவளவனை கூட்டணியில் இருந்து வெளியேற்றிவிட்டு, தேமுதிக – பாமக இரண்டு கட்சியையும் உள்ளே கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாமக வரவில்லை என்றாலும் பரவாயில்லை தேமுதிகவை கொண்டு வந்து விடலாம், மேலும் திருமாவளவன் தொடர்ந்து கூட்டணியில் வைத்து கொண்டிருப்பதால் கூட்டணிக்குள் சலசலப்பு தான் என உணர்ந்த முதல்வர் முக ஸ்டாலின்.
இம்முறை திருமாவளவன் கூட்டணியில் இல்லை என்றாலும் திமுக உறுதியா வெற்றி பெரும் அந்த வகையில், கடந்த சட்டசபை தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஒதுக்கிய தொகுதியை விட குறைந்த தொகுதியை ஒதுக்கி, அவராகவே கூட்டணியில் இருந்து வெளியேற செய்து விட வேண்டும் என்கிற திட்டத்தில் திமுக தலைமை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

