டென்ஷனான அஜித்… கண்ட நாய்கள் எல்லாம் அட்வைஸ் பண்ணுவதா… என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் அஜித் முதல் முதலில் தெலுங்கு சினிமாவில் தான் ஹீரோவாக அறிமுகமானார், இந்த படத்தின் இயக்குனர் படப்பிடிப்பின் போது ஆற்றில் கேமரா வைத்து காட்சிகள் எடுக்கப்பட்ட போது, ஆற்றில் தவறி விழுந்து மரணம் அடைந்தார். இதனை தொடர்ந்து அஜித் ராசியில்லாத நடிகர் என முத்திரை குத்தப்பட்டது. பின் அந்த தெலுங்கு படம் மரணம் அடைந்த இயக்குனர் தந்தை மீதி படத்தை இயக்கி எடுத்தார். இப்படி முதல் படமே அஜித்துக்கு சோகத்தில் முடிந்தது.

இருந்தும் தயாரிப்பாளர் சோழ பொன்னுரங்கம் தமிழில் அமராவதி படத்தில் நடிகர் அஜித்தை அறிமுகம் செய்து வைத்தார். அஜித்தை அமராவதி படத்தில் அறிமுகம் செய்த சோழ பொன்னுரங்கத்திடன் பலர் சார்.. வேண்டாம், இவர் ராசியில்லாத நடிகர் என தெரிவிக்க,அதெல்லாம் பொருட்படுத்தாமல் அஜித்தை அமராவதி படத்தில் அறிமுகம் செய்து வைத்தார் சோழ பொன்னுரங்கம். படம் நல்ல ஹிட் கொடுத்தது. இதன் பின்பு அடுத்தடுத்து அஜித்துக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஒரு தயாரிப்பாளர் ஒரு நடிகரை அறிமுகம் செய்து வைத்து அந்த நடிகர் எதிர்காலத்தில் உச்சத்துக்கு வந்தாலும், உரிமையோடு எந்த நேரமும் நேரில் சந்திக்கு உரிமை அறிமுகம் செய்து வைத்தவருக்கு உண்டு. ஆனால் தற்பொழுது கூட சோழ பொன்னுரங்கம் உயிரோடு தான் இருக்கிறார், ஆனால் அவர் சந்திக்க முடியாத தூரத்தில் அஜித் இருக்கிறார். மேலும் படம் தயாரிக்க முடியாத நிலையில் தான் சோழ பொன்னுரங்கம் தற்போது இருக்கிறார்.

அவருக்கு ஒரு படம் நடித்து கொடுத்து அவருக்கு நன்றி உணர்வுடன் அஜித் இருந்திருக்கலாம். ஆனால் அஜித் அப்படி இதுவரை செய்யவில்லை. இது சினிமா துறையில் இருக்கும் பலருக்கு வருத்தமும் கூட. அதே போன்று அஜித் எதையும் நேரடியாக பேச கூடியவர், மேலும் அதிக கோபப்பட கூடியவர். ஒரு கால கட்டத்தில் அஜித் கார் ரேஸ் , பைக் ரேஸ் என தீவிரமாக இருந்த பொது பிரபல திரைப்படம் தயாரிப்பாளர் KR அப்போது ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது.

நடிகர் அஜித்தை நம்பி கோடி கணக்கில் முதலீடு செய்து படம் எடுக்கிறார்கள், ஆனால் அவர் கார் ரேஸ், பைக் ரேஸ் என அவர் பக்கம் சென்று கொண்டிருக்கிறார், இந்த நிலையில் நடிகர் அஜிக்கு விபத்து ஏற்பட்டு எதாவது ஓன்று நடந்து படப்பிடிப்பு தடைபட்டால் ஏற்பட்டும் நஷ்டம் பற்றி நினைத்து பார்க்க வேண்டும் என KR பேசியிருந்தார். KR சினிமா தொடர்பான பல முக்கிய பதவிகளில் இருந்தவர். இருந்து இதற்கு அஜித் பதிலளித்ததாவது.

கண்ட நாய் எல்லாம் அட்வைஸ் பண்ண வேண்டாம் என அஜித் தெரிவித்தது, சினிமா வட்டாரத்தில் பெரும் சல சலப்பை ஏற்படுத்தியது. இப்படி யாருக்கு பயம் கொள்ளாமல் துணிவுடன் பேசும் அஜித், ஒரு முறை தயாரிப்பாளர்களுக்கு பெப்சி ஊழியர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனையின் போது, நியாயம் பெப்சி ஊழியர்கள் பக்கம் தான் இருக்கிறது ஏன் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இதனால் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மேலும் AM ரத்தினம் தயாரிப்பில் அஜித் நடிப்பதற்காக கொடுத்த அட்வான்ஸ் பணத்தை பெப்சி ஊழியர்களுக்கு ஆதரவாக அஜித் குரல் கொடுத்தார் என்பதற்காக திரும்பி வாங்கி சென்றார் AM ரத்தினம். எப்படி துணிச்சலாக பல போராட்டங்களை எதிர்கொண்டு தான் இன்று பல ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார் அஜித் என்பது குறிப்பிடதக்கது.

விரட்டியடித்த அஜித்… விஜய் விட்டு கதவை தட்டிய வடிவேலு..! அஜித் கோபத்துக்கு என்ன காரணம் தெரியுமா.?