விஜய்யை புறக்கணித்த மைக் மோகன்..இந்த வயசிலும் கெத்து காட்டு மைக் மோகன்..! என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் வெள்ளி விழா நாயகன் என அழைக்கப்பட்டவர் நடிகர் மோகன். 80 காலகட்டத்தில் அப்போது முன்னணி நடிகராக இருந்த நடிகர் ரஜினி மற்றும் கமல்ஹாசனுக்கு கடும் சவாலாக விளங்கியவர் மோகன். இவர் நடித்த படங்களில் பெரும்பாலன பாடல்கள் இவர் மைக்கை பிடித்து மேடையில் படுவது போன்று காட்சி இடம்பெற்றதால்,இவரை மக்கள் மைக் மோகன் என்றே அழைத்தனர், அந்த அளவுக்கு அவர் நடித்த படங்களின் பாடலும் செம்ம ஹிட் கொடுத்தது.

மோகன் ஹிட்ஸ் ஒரு கேசட் கொடுங்க என ஆடியோ கடையில் மக்கள் கேட்டு வாங்கும் அளவுக்கு மோகன் நடித்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் சூப்பர் ஹிட் கொடுத்தது. இந்த பெருமை இசைஞானி இளையராஜாவுக்கும் முக்கிய பங்கு உண்டு. சுமார் 200 படங்களுக்கு மேல் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என தென்னிந்தியா மொழிகளில் நடித்த நடிகர் மோகன் 1984ம் ஆண்டு ஒரே வருடத்தில் மட்டும் சுமார் 19 படங்கள் அவர் நடிப்பில் தமிழில் மட்டும் வெளியானது.

இதில் பெரும்பாலன படம் செம்ம ஹிட். 1980 தொடங்கி 1990 வரை அசைக்கமுடியாத சக்தியாக திகழ்ந்த நடிகர் மோகன், சொந்த குரலில் நடித்த பின்பு அவர் படம் தோல்வியை தழுவியது. இதன் பின்பு சினிமாவில் காணாமல் போய்விட்டார். தொழில் அதிபராக இருந்து வரும் மோகன், சினிமாவில் நடிக்க மீண்டும் வாய்ப்புகள் வந்தாலும் இடையில் ஹீரோவாக ஓன்று இரண்டு படங்கள் நடித்தவர், மற்ற கதாபாத்திரங்களில் நடிக்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் படம் தோல்விக்கு பின் அவர் நடிக்கும் 66-வது படத்தை தெலுங்கு சினிமாவை சேர்ந்த பிரபல இயக்குனர் வம்சி இயக்குகிறார்,இதில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்திற்கான பூஜை நடைபெற்று இதில் ஒரு பாடல் காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த படத்தில் விஜய் அண்ணனாக நடிக்க மைக் மோகனை அணுகியுள்ளது பட குழுவினர்.

இந்த கதாபாத்திரத்துக்கு மைக் மோகன் நடித்தால் நன்றாக இருக்கும் என விஜய் விருப்பம் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பட குழுவினர் மைக் மோகனை படத்தில் கமிட் செய்ய பட குழுவினர் அணுகியுள்ளது. படத்தின் கதை என்ன என்று எதையும் கேட்காத மைக் மோகன், புதிய படத்தில் விஜய் அண்ணனாக நீங்க நடிக்க வேண்டும் என சொன்ன உடனே எனக்கு விருப்பம் இல்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளார் மைக் மோகன்.

விஜய் சார், நீங்க நடித்தால் நன்றாக இருக்கும் என விருப்பம் தெரிவிக்கிறார் என பட குழுவினர் தெரிவிக்க. என்னோட நடிங்க அவருக்கு விருப்பம் இருக்கலாம், அவருடன் நடிக்க எனக்கு விருப்பம் இல்லையே என சிரித்து கொண்டே பேசிய மைக் மோகன், அதிகம் சம்பளம் பேசியும் கூட விஜய் படத்தில் நடிக்க மறுத்து விட்டார் மைக் மோகன், இதனை தொடர்ந்து அவருக்கு பதில் நடிகர் ஷியாம் புதிய படத்தில் விஜய் அண்ணனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

விபூதி, குங்குமம் வைக்க கூடாதா.? ஏ ஆர் ரகுமானுக்கு முக்கிய சினிமா பிரபலம் கண்டனம்.. என்ன நடந்தது தெரியுமா.?