Home Uncategorized பட வாய்ப்புக்காக 60 வயது நடிகருடன் ஜோடி சேரும் திரிஷா..

பட வாய்ப்புக்காக 60 வயது நடிகருடன் ஜோடி சேரும் திரிஷா..

0

கடந்த 20 வருடங்ளுக்கு மேலாக தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. அவ்வப்போது தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பிற மொழிப்படங்களிலும் திரிஷா தலைகாட்டுவதுண்டு. இந்நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு இவர் நடித்து தெலுங்கு, மற்றும் தமிழில் வெளிவந்த ‘நாயகி’ படத்துக்கு பிறகு தெலுங்கு பக்கம் போகாமல் இருந்த திரிஷா தற்பேது 5 ஆண்டுகளுக்கு மீண்டும் தெலுங்கு திரைப்பக்கம் காலடி எடுத்துவைக்க உள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தை கோபிசந்த் மலினேனி என்ற இயக்குனர் இயக்கப்போவதாக கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட 60 வயது கொண்ட பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக திரிஷா ஏற்கெனவே ‘லயன்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் நடிக்க முதலில் ஸ்ருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், அவர் பல்வேறு படங்களில் பிசியாக நடிப்பதாக கூறி, இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். அதன்பிறகே திரிஷா தேர்வானதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!