கிருஷ்ண ஜெயந்தியில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த யோகி பாபு

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் பிசியான காமெடி நாயகனாக வலம் வருபவர் காமெடி நடிகர் யோகி பாபு… தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருடனும் இவர் இணைந்து நடித்துள்ளார். வடிவேலு, விவேக், சந்தானம் ஆகியோரின் இடங்களை தற்போது பூர்த்தி செய்துவருவது யோகி பாபுதான்.

சமீபத்தில் இவருடைய நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளிவந்த ‘நவரச’ என்ற வெப் சீரிஸ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. படங்களில் எவ்வளவு பிசியாக இருக்கிறாரோ, அதே அளவுக்கு சமூக வலைத்தளத்திலும் இவர் பிசியாகவே இருந்து வருகிறார்.

அவ்வப்போது தான் நடிக்கும் படங்களைப் பற்றிய அப்டேட்டுகளை ரசிகர்களுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வரும் யோகிபாபு, நேற்று கொண்டாடப்பட்ட கிருஷ்ண ஜெயந்திக்கு தனது வாழ்த்துக்களை கூறும்விதமாக, அவர் கிருஷ்ணர் வேடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் யோகி பாபு கிருஷ்ணர் வேடத்தில் அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர். இந்த புகைப்படம் ஏதாவது படத்திற்காக எடுக்கப்பட்டதா, அல்லது கிருஷ்ண ஜெயந்திக்காக எடுக்கப்பட்டதா? என்பது தெரியவில்லை. யோகி பாபு தற்போது விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘பீஸ்ட்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.