பிஜேபியில் இணைந்த பிரபல அரசியல்கட்சி தலைவரின் மனைவி…!

0
Follow on Google News

சென்னை : முன்னாள் பிஜேபி மாநில தலைவரும் தற்போதைய மத்திய அமைச்சருமான எல். முருகன் தலைவராக இருந்த காலகட்டத்தில் சில திராவிட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தொடர்ந்து பிஜேபியில் இணைந்துவந்தனர். ஆனால் அண்ணாமலை மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகு அந்த வேகம் குறைந்ததாக விமர்சிக்கப்பட்டது.

ஆனால் அண்ணாமலை திரைமறைவில் பல திமுக தலைவர்களுடன் பேசிவந்ததாக கூறப்படுகிறது. அதன்பலனாக சமீப நாட்களாக இளைஞர்கள் மகளிர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து பிஜேபியில் இணைந்து வருகின்றனர். மேலும் சமீபத்தில் தனக்கும் தனது தந்தைக்கும் திமுக உரிய மதிப்பை அளிக்கவில்லை என கூறி திருச்சி எம்பி சிவாவின் மகன் சூர்யா பிஜேபியில் இணைந்தார்.

தற்போது தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனரும் தலைவருமான டோலகேட் புகழ் வேல்முருகன் அவர்களின் மனைவி காயத்ரி மாநில பிஜேபி தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பிஜேபியில் இணைந்தார். ஏற்கனவே நாகை முன்னாள் திமுக எம்பி முருகையா என்பவரின் மகன் எம்.ரமேஷ் பிஜேபியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வேல்முருகனின் மனைவி காஞ்சிபுரத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்துவருகிறார். இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக 2018ல் விவாகரத்திற்கு மனுகொடுத்து அது இன்னும் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தனது கணவரால் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பயந்த நிலையில் இருந்துவந்துள்ளார் காயத்ரி.

இதனிடையே செங்கல்பட்டு மாவட்ட பிஜேபி மகளிர் அணி தலைவியான மாலா செல்வகுமார் என்பவர் மூலம் பிஜேபியில் இணைய முடிவெடுத்த காயத்ரி நேற்று மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பிஜேபியில் இணைந்தார். சமீபகாலமாக அண்ணாமலை வருகைக்கு பின் பிஜேபி அசுர வேகத்தில் வளர்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.