தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் திருநங்கைகள் அட்டகாசம்.. கடும் அச்சத்தில் பொதுமக்கள்..

0
Follow on Google News

தமிழகம் முழுவதும் திருநங்கையர்கள் தொல்லை எல்லை மீறி போய்க் கொண்டிருக்கிறது என்கிற குற்றசாட்டு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. சென்னை சோழிங்கநல்லூர் அருகே விஜய் என்கிற நபர் அவருடைய நண்பருடன் நடந்து சென்ற போது, வழியை மறித்து திருநங்கை ஒருவர் பணம் கேட்டுள்ளார். அதற்கு விஜய் இல்லை என்று தெரிவித்துள்ளார். அவருடைய நண்பர் பர்சை எடுத்து பார்த்து, ரூபாய் 10 மற்றும் 50 நோட்டுகள் இல்லை சில 500 ரூபாய் தாள்கள் வைத்துள்ளார்.

சில்லறை இல்லை என சொன்னதும் அந்த திருநங்கை “எவ்வளவுக்கு வேணும் கொடு நான் தரேன் ” என்று திருநங்கை பர்சை எடுத்து, அதில் இருந்து 100 ரூபாய்களாக எடுத்து எண்ணத் தொடங்கினார். கையில் அவ்வளவு பணம் வைத்திருப்பவர் எதற்கு பணம் கேட்டக வேண்டும்? மேலும் விஜய் பணம் இல்லை என சொன்னதும் அவரையும் அவருடைய நபர் இருவரையும் அசிங்கமாக திட்டி விட்டு கிளம்பிவிட்டார், அந்த திருநங்கை.

அடுத்து ஐடி துறையில் பணியாற்றும் 3 பெண்களை வழிமறித்து அவர்களிடமும் பணம் தரும் மிரட்டியுள்ளார் திருநங்கை, அவர்களும் பயந்து போய் பர்சை எடுத்து 100 ரூபாய் கொடுத்துள்ளார். அதை வாங்கிவிட்டு அடுத்து ஒரு கடைக்கு சென்றுள்ளார். இப்படி கடைகளில் பணம் கேட்டு தொந்தரவு செய்யும் திருநங்கைகள், வாடிக்கையாளர்கள் முகம் சுழிப்பார்கள் என்று கடைக்காரர்கள் எதையாவது கொடுத்து அனுப்பி விடுகிறார்கள்.

தமிழகத்தில் பல இடங்களில் குறிப்பாக சென்னையில் எங்கு சென்றாலும் இது தான் நிலமை. புறநகர் ரயில் பயணிகள் படம் தரவில்லை என்றால் திருநங்கையர் செயல்கள் மிக மோசமானதாக இருக்கிறது. அசிங்கமாக பேசுகிறார்கள். 10 ரூபாய் கொடுத்தால் “இதை வெச்சுட்டு நான் என்னத்த பண்ண, 50 கொடு” என்று கேட்கிறார்கள். பணம் தர மறுத்தால் மேலும் கேவலமாக பேசுகிறார்கள்.

திருநங்கைகளுக்கு பயந்து தான் பலரும் பணம் தருகிறார்கள், பெரும்பாலும் யாரும் விருப்பப்பட்டு பணம் தருவதில்லை.கடந்த சில மாதங்களுக்கு முன் பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம், பழனி பேருந்து நிலையம் மற்றும் அடிவாரப் பகுதிகளில், பக்தர்களிடம் வலுக்கட்டாயமாக பணம் வசூலிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தனர் திருநங்கைகள்.சில நேரங்களில் பக்தர்களிடம் இருந்தும் பணத்தை பிடுங்கிக் கொண்டு சென்று விடுவதாகவும் புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து பழனி டிஎஸ்பி தலைமையில் திருநங்கைகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, திருநங்கைகளின் வளர்ச்சிக்கு திருநங்கைகள் நலவாரியம் இருப்பதாகவும், அதில் சுயதொழில்களுக்காக வட்டியில்லாக் கடன்கள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் திருநங்கைகள் அவர்களின் வளர்ச்சி குறித்த அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டுமே தவிர, பணம் வசூல் செய்வதையே நோக்கமாகக் கொண்டிருக்க கூடாது என்றும் அறிவுரை வழங்கிய காவல்த்துறை.

தொடர்ந்து பழனி வரும் பக்தர்களிடம் கட்டணம் வசூல் செய்வது பணம் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது, இதன் பின்பே பழனியில் ஓரளவு திருநங்கைகள் அட்டகாசம் குறைந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னையில் திருநங்கைகளில் செயப்பாடுகள் பொதுமக்களுக்கு மிக பெரிய அச்சத்தை ஏற்படுத்தி வருவதால் காவல்த்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற குரல் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.