ரஜினிகாந்தை நம்பி மோசம் போன மாரிதாஸ்..! நன்றி மறந்து மிச்சர் சாப்பிடும் ரஜினிகாந்த்.! மிக பெரிய சிக்கலில் மாரிதாஸ்…

0
Follow on Google News

பிரபல எழுத்தாளர் மாரித்தாஸ் வலதுசாரி சிந்தனையாளர், பிரதமர் மோடி மற்றும் பாஜகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றவர், மேலும் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு வெளியிட்ட பின்பு தொடர்ந்து ரஜினிகாந்துக்கு ஆதரவாக வீடியோ பதிவு செய்துவந்தார். ரஜினிகாந்த் குறித்து வெளியாகும் அவதூறுகள் மற்றும் கேலி கிண்டல்களுக்கு பதிலடி தரும் விதத்தில் எழுத்தாளர் மரித்தாஸ் வீடியோ வெளியிட்டு வைத்தார்.

நடிகர் ரஜினிகாந்த் பத்திரிகையாளர் சந்திப்பு அல்லது மேடை பேச்சுக்களில் பேசும் பேச்சுக்கள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகும். மேலும் கேலி கிண்டலுக்கு உள்ளாகும் போது, அவை அனைத்துக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதத்தில் வீடியோ வெளியிட்டு நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் கொள்கை பரப்பு செயலாளர் போன்றே செயல்பட்டு ரஜினி ரசிகர்களால் சின்ன தலைவர் என கொண்டாடப்பட்டு வந்தவர் பிரபல எழுத்தாளர் மரித்தாஸ்.

ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்கினால், அந்த கட்சியில் முக்கிய பொறுப்பு வகிப்பார் மாரிதாஸ் என அப்போது பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஆனால் இதோ வருகிறேன். அதோ வருகிறேன் என கொரோனவை காரணம் காட்டி அவரை நம்பி களமாடியவர்கள் அனைவரையும் ஏமாற்றிவிட்டு சினிம படப்பிடிப்பில் கவனம் செலுத்த தொடங்கியவர் அடுத்தடுத்து தான் நடிக்கும் படம் குறித்து ரெம்ப பிசியாக உள்ளார் ரஜினிகாந்த்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் சமீபத்தில் மர்மமாக மரணம் அடைந்த மணிகண்டன் என்ற கல்லூரி மாணவர் குறித்து வீடியோ ஒன்றை மாரிதாஸ் சமீபத்தில் வெளியிட்டிருந்தார். மேலும் தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்த ஒரு பதிவுக்காக நேற்று மாரிதாஸை கைது செய்த போலீசார் அவரை தேனி சிறையில் அடைக்கப்பட்டனர். மாரிதாஸை கைது செய்ய போலீசார் அவரது வீட்டுக்கு வந்த அடுத்த சில மணி நேரங்களில் பாஜகவினர் குவிந்தனர்.

மேலும் மாரிதாஸ் கைது செய்வதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பாஜகவினர், தற்போது அவரை சிறையில் இருந்து வெளியில் கொண்டு வர பல்வேறு வகையில் போராடி வருகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்த் அவர்களுக்கு பக்க பலமாக இருந்து தொடர்ந்து வீடியோ வெளியிட்ட வந்த மாரிதாஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதற்கு எந்த ஒரு கண்டன அறிக்கை அல்லது அவர் சிறையில் இருந்து வெளியில் வருவதற்கு உதவியாக எந்த ஒரு நடவடிக்கையிலும் ரஜினிகாந்த் ஈடுபடாமல் அமைதியாக இருந்து வரும் நிலையில் ரஜினிகாந்த் நன்றி மறந்து மிக்சார் சாப்பிடுகிறாரா என மாரிதாஸ் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.