இதற்காக தமிழர்கள் வெட்கப்படுங்கள்.! எதற்கு தெரியுமா.? வெளுத்து வாங்கிய கவிஞர் தாமரை..

0
Follow on Google News

தமிழக அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித் தாளை கட்டாயமாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித் தாள் தகுதித் தேர்வை கட்டாயமாக்க அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி, அரசுப் பணிகளுக்கான அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித் தாள் கட்டாயம் இடம்பெறும். அதற்கான பாடத் திட்டம் 10-ம் வகுப்பு தரத்தில் இருக்கும். இத்தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் பெறவேண்டும்.

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ ஆகிய இரு நிலைகள் கொண்ட தேர்வுகளில், விரித்துரைக்கும் வகையில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு நடத்தப்படும். குரூப்-3, குரூப்-4 தேர்வுகளில் பொது ஆங்கிலம் நீக்கப்பட்டு, பொது தமிழ் மொழித் தாள் மட்டுமே மதிப்பீட்டு தேர்வாக இருக்கும். அதேபோல, ஆசிரியர் தேர்வுவாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்,

வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் உள்ளிட்ட பிற தேர்வு முகமைகள் நடத்தும் அனைத்துவித போட்டித் தேர்வுகளுக்கும் இந்த நடைமுறை பொருந்தும் என தமிழக அரசின் இந்த அரசாணை குறித்து கருத்து தெரிவித்துள்ள திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் தாமரை தெரிவித்துளதாவது. அப்பாடா… இன்பத்தேன் வந்து பாய்கிறது காதுகளில், அரசாணை பிறப்பித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்தும் நன்றியும் !.

வெறும் அரசாணையுடன் நின்று விடாமல், அது ஒவ்வொரு தேர்விலும் நடைமுறைப்படுத்தப் படுகிறதா என்றும் அரசாங்கம் கண்காணிக்க வேண்டும். தமிழக அரசின் எந்த ஒரு துறையிலும், தமிழ் தெரியாத ஒருவர்கூட இல்லை எனும் நிலை எதிர்காலத்தில் வர வேண்டும் !.அப்படியே நகர்ந்து, தமிழை ஒரு பாடமாகவேனும் கற்காமல் தமிழ்நாட்டில் பள்ளிப்படிப்பை முடிக்க முடியாது எனும் நிலை கொண்டு வரப்பட வேண்டும்.

தமிழர்களாக இருந்து கொண்டு, தமிழே எழுத படிக்கத் தெரியாமல் வரும் இளைய தலைமுறையினர் மிரட்சியைக் கொடுக்கின்றனர். திரைப்படவுலகில் கேட்கவே வேண்டாம், தமிழா..?? வீசை என்ன விலைதான் ? !!!தமிழ்ப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழைக் கட்டாயப்பாடம் ஆக்குங்கள். தமிழர்கள், தமிழ் தெரியவில்லையேல் அதற்காக வெட்கப் படுங்கள் என வெளுத்து வாங்கியுள்ளார் கவிஞர் தாமரை தெரிவித்துள்ளார்.