தரமான சம்பவம் செய்த செந்தில் பாலாஜி..! இந்த அவமானம் ஜோதிமணிக்கு தேவையா.? வீதிக்கு வந்தது செந்தில் பாலாஜி – ஜோதிமணி சண்டை…

0
Follow on Google News

கரூரில் மாற்றுதிறனாளிகளுக்கு முகாம் நடத்த பலமுறை கோரிக்கை வைத்தும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட ஆட்சியரை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் கரூர் மக்களவை தொகுதி உறுப்பினர் ஜோதிமணி எம்.பி கடந்த வாரம் தொடர்ந்து இரண்டு நாட்கள் தர்ணாவில் ஈடுப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான என்னை மக்கள் பணி செய்யவிடாமல் தடுக்கும் கரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து ,மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டதை துவங்கியுள்ளாதாகவும் தெரிவித்த ஜோதிமணி தொடர்ந்து இரண்டு நாட்கள் தனது போராட்டத்தை நடத்தியவர் பின் தனது டிவீட்டர் பக்கத்தில்,”கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘ADIP’ முகாம் நடத்தப்படும் என்று உத்தரவாதம் கொடுக்கப்பட்டத்தை அடுத்து உள்ளிருப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜோதிமணியின் இந்த போராட்டம் திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது உள்ள தொடர் கருத்து வேறுபாடு தான் காரணம் என கூறப்பட்டு வந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி. ஊராட்சி மன்ற தலைவர் தனது கோரிக்கைகளை மனுவாக யாரிடம் கொடுத்தார்? அவர் கோரிக்கையை பட்டியலிட்டது என்ன ? ஊராட்சிக்கு என்ன தேவை என்பதை அவர் மாவட்ட ஆட்சியரிடம் உரிய மனுவாக எழுதி கொடுத்தால் மாவட்ட ஆட்சியர் அதனை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பார் என்றார்.

“கடந்த 10 வருட அதிமுக ஆட்சியில் தமிழகம் மிகை மின் மாநிலம் என்று சொன்னவர்கள், நாலரை லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு ஏன் வழங்கப்படவில்லை? திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியில் ஆறு மாதங்களில் ஒரு லட்சம் இலவச மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு மின்கட்டணம் மூலம் மின்சாரம் பெற்று வரும் பூந்தோட்ட மின் இணைப்பு பெற்றவர்களுக்கு தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று இலவச மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரு சிலர் தங்கள் இருப்பதை காட்டிக் கொள்வதற்காக கரூர் மாவட்ட நிர்வாகம் மீதும், மாவட்ட ஆட்சியர் மீதும் குற்றச்சாட்டு வைக்கின்றனர். செய்தித்தாள்கள் தொலைக்காட்சிகளில் தாங்கள் இருப்பதைக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்கள் அப்படி செய்கின்றனர்” என அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியுள்ளது மறைமுகமாகவே தான் ஜோதிமணியை குறிப்பிட்டுள்ளார் என்று தமிழக அரசியலில் பேசப்பட்டு வரும்நிலையில். இந்த அவமானம் ஜோதிமணிக்கு தேவையா.? என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.