எம்பி செந்தில்குமார்க்கு திமுக தலைமை வைத்த ஆப்பு… இனி அந்த விஷயத்துக்காக அறிவாலயம் பக்கமே போக முடியாது…

0
Follow on Google News

திமுக தர்மபுரி எம்பி Dr. செந்தில்குமார், அதிக நேரம் சமூக வலைதளத்தில் பதிவு செய்து நேரத்தை செலவு செய்து பொழுதை கடத்தி வருகின்றவர். எம்பியான புதிதில் சமூக வலைதளத்தில் யாருடனாவது வம்பிழுத்து சண்டையிட்டு பொழுதை கடத்தி வந்தவர், பாஜக, ரஜினி ரசிகர்கள், நாம் தமிழர்கட்சியினர், பாமக என யாருடனாவது வம்பிழுத்து பொழுதை கழித்து வந்தவர், நடிகர் பார்த்திபன் வம்பிழுத்து அவரிடம் செம்ம டோஸ் செந்தில் குமார் வாங்கிய சம்பவமும் அரங்கேறியது.

இப்படி அடுத்த கட்சியினரிடம் தான் சமூக ஊடகத்தில் வம்பிழுத்து சண்டையிட்டு பொழுதை கடத்துகிறார் என்றால், அவர் கட்சியை சேர்ந்த திமுக எம்பி தயாநிதிமாறனையும் விட்டு வைக்கவில்லை. மாறன் சகோதரர்கள் நடத்தும் ஊடகங்களில் தனக்கு முக்கிய துவம் இல்லை என்று வெளிப்படையாகவே மாறன் சகோதர்களை சீண்டினார் செந்தில்குமார் எம்பி.

இந்நிலையில் திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என எதிர்கட்சிகளால் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் அதை உடைக்கும் வகையில் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறாது திமுக தலைமை. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தர்மபுரியில் நடந்த ஒரு அரசு நிகழ்ச்சியில் இந்து முறைப்படி பூமி பூஜை நடைபெற்றதை உடனே தடுத்து நிறுத்தி, இது திராவிட மாடல் ஆட்சி, இந்த ஆட்சியில் இது போன்று நடந்த கூடாது உடனே இதை நிறுத்துங்கள் என கோபப்பட்டு பேசிய செந்திகுமார் எம்பி, அங்கிருந்த புரோகிதரை விரட்டினார்.

இது ஏற்கனவே திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என பாஜக உட்பட எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், செந்தில் குமார் எம்பி செயல்பாடுகள் மேலும் திமுக தலைமைக்கு பிரச்சனை தேடி தந்தது. மேலும் செந்தில்குமார் நடவடிக்கைகளால் அவர் மீது திமுக தலைமை கடுமையான கோபத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்து இருந்தாலும் கூட, செந்தில் குமார் எம்பியாக இருக்கும் தர்மபுரி தொகுதியில் இருக்கும் 6 சட்டமன்ற தொகுதியிலும் திமுக தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் ஏற்கனவே எம்பி செந்தில்குமார் மீது அதிருப்தியில் இருக்கும் திமுக தலைமை, வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்குமா.? என சந்தேகம் நிலவி வந்த நிலையில், தற்பொழுது இனி மீண்டும் போட்டியிடுவதற்கு எம்பி செந்தில்குமார் சீட் கேட்டு அறிவாலயம் பக்கமே செல்ல முடியாத அளவு ஒரு சம்பவம் அரங்கேறி வருகிறது.

வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியில் பல மாற்றங்கள் நிகழ இருக்கிறது, அதற்கான நகர்வுகள் தற்பொழுது இருந்தே அரங்கேறி வருகிறது. திமுக மற்றும் பாமக இரண்டு கட்சிகளின் சமீப கால நடவடிக்கைகள், திமுக கூட்டணியில் பாமக இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

திமுக கூட்டணியில் பாமக இடம் பெறுவதால், விடுதலை சிறுத்தை கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி எடப்பாடி தலைமையிலான அதிமுக கூட்டணியில் இடம் பெறுவதற்கான நகர்வுகளை தற்பொழுது இருந்தே திருமாவளவன் செய்து வருகிறார். தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமியை மரியாதை நிமித்தமாக திருமாவளவன் சந்தித்தது கூட அரசியல் கூட்டணிக்காக தான் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் திமுக கூட்டணியில் பாமக இடம்பெறும் பட்சத்தில் தர்மபுரி தொகுதியில் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என்றும், அதனால் செந்தில்குமார் தர்மபுரி தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு ஒரு சதவிகிதம் கூட இல்லை என்பது தகவல் உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Light off செய்துருப்பான்.. இதற்கும் அண்ணாமலை தான் காரணம்… காயத்ரி சொன்ன புதிய குற்றசாட்டு