இனி விஜய் ஏமாற்ற முடியாது… கிழிக்கப்படும் விஜய் முகத்திரை… அந்த விஷயத்தில் உறுதியாக இருக்கும் அஜித்..

0
Follow on Google News

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆறு வருடங்களில் வெளியான படங்களில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படம் மட்டுமே தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தந்து ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் என்றே சொல்லலாம். அதை தவிர்த்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் படம் படுதோல்வியை சந்தித்தது,

அதேபோன்று விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய சேதாரத்தை உண்டு பண்ணி, பிகில் படத்திற்குப் பின்பு பெரிய பட்ஜெட் படங்களை எடுப்பதற்கு ஏஜிஎஸ் நிறுவனம் தயக்கம் காட்டி வருகின்றனர். தமிழ் சினிமாக்களில் 100 படங்களுக்கு மேல் தயாரித்த தேனாண்டாமல் ஃபிலிம்ஸ் ஒரே ஒரு படம் விஜய் நடிப்பில் மெர்சல் படத்தை தயாரித்த பின்பு ஏற்பட்ட நஷ்டம் பெருமளவு படம் தயாரிப்பது குறைத்துக் கொண்டனர்.

அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியாகும் படங்கள் தோல்வியை சந்தித்து தயாரிப்பாளருக்கு சேதாரத்தை ஏற்படுத்தி வந்தாலும் கூட வசூல் ரீதியாக விஜய் நம்பர் ஒன் என்கின்ற ஒரு பிம்பம் தொடர்கிறது. இதற்கு முக்கிய காரணம் விஜய் நடிப்பில் வெளியாகும் படத்தின் முதல் நாள் வசூல் மற்ற நடிகர் படத்தை விட அதிகம் குவித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.. அந்த வகையில் முதல் நாள் வசூலை மட்டுமே கணக்கிட்டு தொடர்ந்து விஜய் தான் நம்பர் ஒன் என்கின்ற ஒரு பிம்பம் தமிழ் சினிமாவில் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விஜய் நடிப்பில் வெளியான படங்கள் ரிலீஸ் ஆகி அடுத்த சில நாட்களில் வசூல் மிகப்பெரிய அளவில் குறைந்து இருந்தாலும், முதல் நாளில் படம் அதிக வசூல் செய்வதை சுட்டிக்காட்டியே தொடர்ந்து நடிகர் விஜய் தான் நம்பர் ஒன் என்கின்ற ஒரு பிம்பம் கட்டி அமைக்கப்பட்டு, முதல் நாள் வசூலை விளம்பரம் செய்து தன்னுடைய அடுத்த படத்திற்கான சம்பளத்தையும் அதிகரித்து, புதிய படத்தின் வியாபாரத்தையும் கச்சிதமாக முடித்து விடுகிறார் நடிகர் விஜய்.

இந்த நிலையில் யார் உண்மையிலே நம்பர் ஒன் என்று பார்த்து விட வேண்டும் என்கின்ற முடிவில் விஜய் படம் வெளியாகும் அதே தேதியில், தன்னுடைய படத்தையும் வெளியிட முடிவு செய்த அஜித், பொங்கல் அன்று விஜய் நடிக்கும் வாரிசு மற்றும் அஜித் நடிக்கும் துணிவு ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது. அஜித் – விஜய் இருவரும் நேரடியாக மோத இருப்பதால் யார் நம்பர் ஒன் என்பது தெரிந்து விடும்.

சமீபத்தில் வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரண்டு படங்களின் ட்ரைலர் வெளியான நிலையில், துணிவு ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, ஆனால் வாரிசு ஒரு மெகா சீரியல் என்கின்ற ஒரு விமர்சனத்தை பெற்று எதிர்பார்ப்பில் இருந்தவர்களை ஏமாற்றி விட்டது. இதனால் வாரிசு படத்தை விட துணிவு படத்திற்கு மக்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறார்கள்.

விஜய் – அஜித் ஆகிய இருவர் படங்களும் நேருக்கு நேராக மோத உள்ள நிலையில், அஜித்தின் துணிவு, விஜய் வாரிசு படத்தை விட அதிக வசூல் சாதனை படைத்து, இதுவரை தான் நம்பர் ஒன் விஜய் என்கிற பிம்பம் உடைக்கப்பட்டு, விஜயின் முகத்திரையை கிழிப்பதற்காகவே அஜித் நேரடி போட்டியில் இறங்கியுள்ளார். அஜித்தின் இந்த போட்டிக்கு ரெட் ஜென்ட்ஸ் மூவிஸ் பெருமளவில் உதவி செய்து வருவதால். இம்முறை விஜய் தப்பிக்கவே முடியாது என்கிறது சினிமா வட்டாரங்கள்.