டெல்லியில் இருந்து எடப்பாடி விரட்டியடிப்பு… ஆபரேஷன் அமித்ஷா ஸ்டார்ட்… டெல்லியில் நடந்த பரபரப்பு..

0

கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவை கூட்டி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்தெடுக்கப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி. இதன் பின்பு எடப்பாடி மற்றும் ஓ.பன்னிர்செல்வம் இடையில் மோதல் அதிகரித்தது, ஓ.பன்னீர் செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்களை எடப்பாடி பழனிசாமி நீக்கினார், பதிலுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் எடப்பாடி ஆதரவாளர்களை ஓபிஎஸ் நீக்கினார்.

எடப்பாடி பழனிச்சாமி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட பின்பு தொடர்ந்து அவருடைய ஆதரவாளர்கள் மீதான ஊழல் வழக்குகள் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது, மேலும் எடப்பாடி தொடர்புடைய நபர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் காப்பாற்றும் நோக்கில் ஜூலை 22ம் தேதி டெல்லியில் நடந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு நடைபெற்ற விருந்து உபசரிப்பு நிகழ்வில் பங்கேற்று விட்டு ஜூலை 25ம் தேதி வரை டெல்லியில் தங்கியிருந்து பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரை தனியாக சந்திக்க திட்டமிட்டிருந்தார் எடப்பாடி.

விருந்து உபசரிப்பு முடிந்து பிரதமர் மோடி மற்றும் உள்த்துறை அமைச்சர் அமித்சா ஆகியோரை சந்திக்க பொக்கையும் கையுமாக முயற்சி செய்து வந்துள்ளார் எடப்பாடி… ஆனால் எடப்பாடியை புறக்கணித்துவிட்டு அதே நேரத்தில் பாஜக டெல்லி தலைமை, கொரோனா தொற்றின் காரணமாக மருத்துவமனையில் இருக்கும் ஓ.பண்னிர் செல்வத்தை தொடர்புகொண்டு, அதிமுக உட்கட்சி நிலவரம் குறித்து கேட்டறிந்து வந்துள்ளது.

கடந்த சட்டமற்ற தேர்தலின் போது தொகுதி பங்கீடு பேச்சுவார்தைக்காக சென்னை வந்த அமித்ஷாவிடம் ஓபிஎஸ் சுமூகமாக நடந்து கொண்டாலும், எடப்பாடி ஒரு சில விஷயங்களில் இறங்கி வரவில்லை, இதனால் பேச்சுவார்த்தை முடிந்து அன்று மாலையே டெல்லி செல்ல வேண்டிய அமித்ஷா நள்ளிரவு வரை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார். இது போன்று பல சந்தர்ப்பங்களில் பாஜக மற்றும் பாஜக தலைவர்களை அலட்சியமாக புறக்கணித்தவர் எடப்பாடி பழனிச்சாமி.

மேலும் எடப்பாடி ஆதரவாளர்களான கே.பி.முனுசாமி, வேலுமணி,தங்கமணி, செல்லூர் ராஜு போன்றோர் தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக பேசி வரக்கூடியவர்கள், இதை அனைத்தையும் டெல்லி தலைமை கண்காணித்து வந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் எடப்பாடி டெல்லியில் இருக்கும் போதே அவரை சந்திக்க விரும்பாத டெல்லி தலைமை அதே நேரத்தில் ஓபிஎஸை தொடர்பு கொண்டு சில முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவின் பேரில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் புதியதாக 14 மாவட்ட செயலாளரை நியமனம் செய்துள்ளார் ஓபிஎஸ், மேலும் ஏற்கனவே இருந்த தொகுதி செயலாளர் மற்றும் ஊராட்சி செயலாளர் பதவிகளை மீண்டும் கொண்டுவரபடும் என் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார், அது மட்டுமின்றி அதிமுக பொருளாளர் என்கிற முறையில் அக்கட்சியின் வாங்கி கணக்கு தொடர்பாக ரிசர்வ் வாங்கிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள ஓபிஎஸ் விரைவில் தன்னுடைய தலைமையில் அதிமுக பொதுக்குழுவை சென்னையில் கூட்ட ஏற்பாடும் செய்து வருகிறார், இது அனைத்தும் டெல்லியின் உத்தரவின் பேரில் செய்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 22ம் தேதி டெல்லி சென்ற எடப்பாடி 24ம் தேதி வரை பிரதமர் மற்றும் அமித்ஷா ஆகியோரை சந்திக்க வாய்ப்பு கிடைக்காமல் காத்திருந்து ஏமாற்றத்துடன் ஒரு நாள் முன்பே டெல்லியில் இருந்து புறப்பட்டவரிடம் விமான நிலையில் அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்ப, ஒரு வித அச்சத்துடன் இது தொடர்பான வழக்கு நிதிமாற்றத்தில் நிலுவையில் இருப்பதால் இது குறித்து ஏதும் பேசமாட்டேன் என தெரிவித்துள்ளார். ஆனால் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போதே ஓபிஎஸ் ஆகியோரை மிக கடுமையாக சமீபத்தில் பேசியவர் எடப்பாடி டெல்லி பயணத்துக்கு பின்பு சற்று பின்வாங்கியுள்ளது அவரது பேட்டியில் வெளிப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் எடப்பாடி டெல்லி பயணத்துக்கு பின்பு அவரது ஆதரவாளர்களான முக்கிய புள்ளிகள் ஒரு வித அச்சத்துடன் இருந்து வருவதும், இதில் பலர் இனி எதிர்காலத்தில் ஓபிஎஸ் அணியில் பாதுகாப்பு நலன் கருதி தஞ்சம் அடையாளம் என எதிர்பார்க்கப்படுகிறது.