நீ ஜெயிச்சிட்ட மாறா… தயாநிதி மாறனுக்கு மிக பெரிய சவாலாக உருவெடுத்த பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம்…

0
Follow on Google News

திமுகவினரால் எங்கள் கோட்டை சென்னை என அழைக்க படும் தலைநகரில், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய மூன்று பாராளுமன்ற தொகுதிகளிலும் சிட்டிங் எம்பியாக இருக்கும் திமுக வினர், சென்னை நம்ம கோட்டை தான, எப்ப தேர்தல் வந்தாலும் மக்கள் நமக்கு தான் வாக்கு அளிப்பார்கள் என்கிற தெனாவட்டில் கடந்த 5 வருடத்தில் தங்களை வாக்களித்து வெற்றி பெற செய்த தொகுதி மக்களுக்கு எதுவும் சொல்லும்டி செய்யவில்லை என தங்கள் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகிறார்கள் சென்னை மக்கள்.

இந்நிலையில் நாமினேஷன் தாக்கல் செய்துவிட்டு தலைநகர் சென்னையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளர்காளான தென் சென்னை சிட்டிங் எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், மற்றும் மத்திய சென்னை சிட்டிங் எம்பி தயாநிதிமாறன் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட போது, மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க, ஆரம்பமே திமுக மீது கடும் அதிருப்தியில் சென்னை மக்கள் இருப்பது அமபலமானது, அதே நேரத்தில்.. ஆகா சென்னை மக்கள் ரெம்ப உஷாராகிவிட்டார்கள், இனி கண்ணை மூடிக்கொண்டு உதயசூரியன் சின்னத்தில் ஒட்டு போட்டு விடுவார்கள் என்கிற எண்ணம் திமுகவினர் மத்தியில் தகர்ந்தது.

இந்நிலையில் மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளராக மீண்டும் தயநிதிமாறன் களம் இறங்கியுள்ளார், பாஜக வேட்பாளராக வினோஜ் பி செல்வம், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக வேட்பாளராக பார்த்த சாரதி ஆகியோர் போட்டியிடுகிறார்கள், இதில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீன்லே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர்களின் கள பனி மிக மந்தமாக உள்ளது.

அந்த வகையில், திமுக – பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இடையில் நேரடி போட்டியாக உருவெடுத்துள்ளது மத்திய சென்னை தேர்தல் களம். பாஜக வேட்பாளராக போட்டியிடும் வினோஜ் பி செல்வம், தேர்தலுக்கு முன்பே மத்திய சென்னை தொகுதியில் தனக்கு சீட் கிடைக்குதோ இல்லையோ என்பதை பற்றி யோசிக்காமல், மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதியிலும் பாஜக தேர்தல் அலுவலகத்தை திறந்து தேர்தல் பணியை முன் கூடிய தொடங்கி, கட்சி தொண்டர்களையும், நிர்வாகிகளையும் தேர்தல் களத்திற்கு தயார் படுத்தியே வைத்திருந்தார்.

மத்திய சென்னை தொகுதியில் கணிசமான சிறுபான்மை மக்கள் வாக்குகள், மற்றும் பட்டியல் சமூக வாக்குகள் உள்ளன, இதில் சிறுபான்மை மக்கள் வசிக்கும் பல பகுதிகளில் இதற்கு முன்பு பாஜக சார்பில் பிரச்சாரம் செல்லவே முடியாத சூழல் இருந்து வந்த நிலையில், தற்பொழுது சிறுபான்மை மக்கள் வசிக்கும் பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் பாஜக வேட்பளர் வினோஜ் பி செல்வத்துக்கு அம்மக்கள் கொடுக்கும் வரவேற்பும் உற்சாகமும், சிறுபான்மை மக்களும் மாற்றத்திற்கான அரசியலை நோக்கி வர தொடங்கி விட்டார்கள் என்பதை பார்க்க முடிகிறது.

மேலும் மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட பாஜக பூத் கமிட்டிகளை மிக வலுவான கட்டமைப்போடு கடந்த சில மாதங்களில் உருவாக்கியுள்ள வினோஜ், சற்று வீக்காக இருக்கும் பூத் எது என ஆராய்ந்து, தேர்த பிரச்சாரத்தை முடித்துவிட்டு இரவு 11 மணி 1 மணி ஆனாலும் அந்தந்த பூத்துகளுக்கு சென்று சரி செய்து வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் இரவு பகல் பாராமல் பாஜக தலைமை தனக்கு கொடுத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வரும் வினோஜ், கட்சி சீட் கொடுத்தது எனக்கு பெருமையாக இருக்கலாம், ஆனால் நான் வெற்றி பெற்றால் தான் என் மீது நம்பிக்கை வைத்து சீட் கொடுத்து கட்சிக்கு பெருமை என்பதை கருத்தில் கொண்டு.

தலைநகர் சென்னையில் தாமரையை மலர செய்ய பாஜக வேட்பாளர் வினோஜ்ன் தீவிர களப்பணியை எதிர்கொள்ள முடியாமல் திணறி வரும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை கதி கலங்க செய்துள்ள வினோஜ்ன் கடின உழைப்பை பார்த்து நீ ஜெயிஜிட்ட மாறா என என்று சொல்லும் அளவுக்கு திமுகவுக்கு மிக பெரிய சவாலாக இருந்து வருகிறார் பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம்.