தொடர் அவமானங்கள்.. எவ்வளவு தான் தங்குறது…. மும்பை அணியில் இருந்து விலகும் ரோஹித் சர்மா…

0
Follow on Google News

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முந்தைய சீசன்களில் மற்ற ஐபிஎல் அணிகளுக்கு மத்தியில் மாஸ் காட்டி வந்த மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆண்டு ஆரம்பம் முதலே தடுமாறி வருகிறது. குறிப்பாக, மும்பை அணியின் கேப்டனாக 5 முறை கோப்பையை வென்ற ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து தூக்கி விட்டு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

மும்பை அணி ரசிகர்களும் கேப்டனை மாற்றியதால் கோபம் அடைந்தனர். இதன் விளைவாக, மும்பை அணி விளையாடும் போட்டிகளில் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாகவும் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். இப்படியான சூழலில், மும்பை அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலுமே வரிசையாக தோல்வி அடைந்தது.

இதனால் கூடுதல் கடுப்பான ரசிகர்கள், மும்பை அணியின் தோல்விக்கு பாண்டியாவின் மோசமான கேப்டன்சி தான் காரணம் என்று குற்றம் சாட்டி வந்தனர். இதற்கிடையில், மும்பை அணி வீரர்களிடையே ஒற்றுமை இல்லை என்றும், அந்த அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக ஏற்கவில்லை என்றும் பலவிதமாக சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் பரவ ஆரம்பித்தன.

மேலும், ரோஹித் சர்மாவா ஹர்திக் பாண்டியாவா என்று ரசிகர்களும் சோசியல் மீடியாவில் விவாத போரை நடத்தி வந்தனர். அதுமட்டுமில்லாமல், போட்டியின் போது மும்பை அணி வீரர்களிடையே நடைபெறும் விவாதத்தை காட்டும் வீடியோக்களும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகின. குறிப்பாக முதல் போட்டியில் ரோஹித் சர்மாவை பீல்டிங் நிற்குமாறு ஹர்திக் பாண்டியா கட்டளை இடுவதும், அப்போது ரோகித் சர்மா கோவத்துடன் பேசுவதும் போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இவ்வாறு முற்றுப்பெறாத பிரச்சனையாக மும்பை அணியின் கேப்டன்சி பிரச்சனை தற்போது வரை நீடித்துக் கொண்டிருக்கிறது. ஒரு அணியில் ஒற்றுமை இருந்தால் தானே ஒரு போட்டியாவது ஜெயிக்க முடியும், ஆனால் மும்பை அணியில் வீரர்களில் ஒருவருக்கொருவர் முரண்பாடாக செயல்படுவதால் அந்த அணி தொடர் தோல்விகளையே தழுவி வருகிறது.

இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க ரோகித் சர்மா அணியில் இருந்து விலகப் போவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரோகித் சர்மா திடீரென அணியில் இருந்து விலகுவதற்கு காரணம், ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சில் அவருக்கு இருக்கும் அதிருப்தி தான் என்று கூறப்படுகிறது.

மேலும் போட்டியில் ஹர்திக் மற்றும் ரோகித் சர்மாவின் முடிவில் முரன்பாடு ஏற்படுவது அணிக்கு பின்னடைவாக உள்ளது. போட்டியின் போது மட்டுமின்றி ஓய்வறையிலும் ஹர்திக் பாண்டியா தனித்து விடப்படுகிறார். அந்த அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக ஏற்கவில்லை. இப்படியான நிலையில் போட்டியில் ஜெயிப்பது என்பது துளியும் சாத்தியமானது கிடையாது. இப்படியான சூழலில் ரோகித் சர்மாணியில் இருந்து விலக முடிவெடுத்து இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.