PTRக்கு எதிராக திமுவினரும் போர் கொடி…களத்தில் இறங்கிய கே.என்.நேரு..

0
Follow on Google News

மதுரை மாவட்ட திமுக அரசியலில், கோஷ்டி பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. மதுரை மாநகராட்சி மேயராக அமைச்சர் மூர்த்தி உட்பட மூன்று மாவட்ட செயலாளர்கள் அவரவர்கள் விருப்பத்திற்கு ஒருவருக்கு மேயர் பதவி பெற்று தருவதற்கு முயற்சி செய்து வந்த நிலையில், நிதி அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் சிபாரிசில் மதுரை மாநகராட்சி திமுக மேயராக இந்திராணி பொன் வசந்த் பதவி ஏற்றார்.

இதனால் அதிருப்தி அடைந்த, அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்டச் செயலாளர்கள் கோ.தளபதி, மணிமாறன் உட்பட மதுரை மாவட்டத்தை சேர்ந்த முக்கிய திமுக தலைவர்கள் யாரும் மேயர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். மேயர் தேர்வுக்கு பின்பு, மதுரை மாவட்ட திமுக அரசியலில் PTR பழனிவேல் தியாகராஜன் திமுகவினரால் புறக்கணித்து வந்தார்.

மதுரையில் தன்னுடைய அரசியல் இருப்பிடத்தை காண்பிக்க கட்சி நிர்வாகிகளுக்கு பிரியாணி விருந்து வைத்த PTR, அந்த விருந்து நிகழ்ச்சியில் பேசுகையில், தி.மு.க.வில் சிலர் தான் நடத்தும் நிகழ்வுகளை தானும் புறக்கணித்து, மற்றவர்களையும் புறக்கணிக்கக் கூறி மிரட்டுவதாக தகவல் கிடைத்துள்ளது. பெருந்தன்மை இன்றி அற்ப விஷயங்களுக்காக நீங்கள் சிறிய மனிதர்களாகி விடாதீர்கள். என்னால் பலன் பெற்று நன்றி இன்றி இருப்பவர்கள் இன்றும் மதுரையில் இருக்கிறார்கள் என PTR பேசியது. மதுரை மாவட்ட திமுக உட்கட்சி பிரட்சனை வெளியில் வந்தது.

அதனை தொடர்ந்து PTR சிபாரிசில் மேயரான இந்திராணி, சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் பெய்த மலையில் தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதியை பார்வையிட வந்திருந்தார்.அப்போது அமைச்சர் மூர்த்தி, அங்கே வந்திருந்த PTR ஆதரவாளரான மேயரிடன் டெண்டர் போட்டெல்லாம் இதை சரி பண்ண முடியாது. போட்ட தார் ரோடு மேலயே ரோடு போட்டுருக்கீங்க. இந்த பகுதியில் மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கலேன்னா உங்களுக்கு எதிரா நான்தான் உண்ணாவிரதம் இருக்கணும் என மேயர் இந்திராணியிடம் அமைச்சர் மூர்த்தி பேசிய வீடியோ ஓன்று வெளியானது.

இப்படி தொடர்ந்து மதுரை மாவட்ட திமுகவில் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், மதுரை மேயர் இந்திராணி கவுன்சிலர்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது, பி.டி.ஆர் ஆதரவாளர்களுக்கு நிதி ஒதுக்குவது, மாவட்டச் செயலாளர்கள் மணிமாறன், கோ.தளபதி மற்றும் அமைச்சர் பி மூர்த்தி ஆகியோர் ஆதரவாளர்களுக்கு நிதி ஒதுக்குவதில்லை என்று கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் பெரும்பாலான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் ஒன்றிணைந்து PTR ஆதரவாளரான மேயரை மாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்ய தீவிரமாக களம் இறங்கியுள்ளனர், இதனை தொடர்ந்து பிரச்சனை மிக சீரியசாக சென்றதைத் தொடர்ந்து திமுகவின் முக்கிய தலைவர் அமைச்சர் கே.என்.நேரு பஞ்சாயத்து செய்ய மதுரை வந்துள்ளார்.

மதுரை தமிழ்நாடு ஓட்டலில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் கவுன்சிலர்களை அழைத்து நேரில் பேசி சமாதானம் செய்துள்ளார் கே.என்.நேரு, ஆனால் அங்கே இருந்த ஒட்டு மொத்த திமுகவினரும் PTR மற்றும் மதுரை மேயருக்கு எதிராக கொந்தளித்துள்ளனர், இனி இது போன்று நடக்காது சரி செய்யப்படும் என சமாதனம் செய்து தற்காலிகமாக இந்த பிரச்சனையை சரி செய்துவிட்டு சென்றுள்ளார் கே.என்.நேரு, ஆனால் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் இந்த பிரட்சனை மீண்டும் வெடிக்கும் என்கின்றது அரசியல் வட்டாரங்கள்.

வாட்ச் விவகாரம் … அண்ணாமலை பயந்து விட்டாரா.? விடாமல் சீண்டும் திமுகவினர்… அண்ணாமலை திட்டம்