பாஜகவில் விஸ்வரூபம் எடுக்கும் ஹனி ட்ராப் விவகாரம்… அண்ணாமலையின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன.?

0
Follow on Google News

பாஜக மாநில விளையாட்டு பிரிவு நிர்வாகி அலிசா அப்துல்லா அலுவலகத்தில் தனியாக திருச்சி சூர்யா சந்தித்தபோது இருவருக்கும் இடையில் என்ன நடந்தது என்கிற ஒரு பரபரப்பு நிலவி வருகிறது. சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் பேசிய திருச்சி சூர்யா கூறுகையில், அலிசா அப்துல்லா தன்னை அவருடைய அலுவலகத்திற்கு வரவழைத்து ஹனி ட்ராப் செய்ததாக தெரிவித்தார்.

அலிசா அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மைக் மற்றும் கேமரா மூலம் வீடியோ நான் பேசியதை வீடியோ எடுத்து அமர் பிரசாத் ரெட்டியிடம் கொடுத்துள்ளார் அலிஷா என்றும், இதன் பின்னணியில் அமல் பிரசாத் திரட்டி செயல்பட்டதாகவும், திட்டமிட்டு தன்னை அலிசா அப்துல்லா மூலம் அங்கே வரவழைத்து என்னை பேச வைத்து அதை அதை வீடியோவாக எடுத்துள்ளனர், அமர்ப்பிரசாத் ரெட்டிக்கு வீடியோ ரெக்கார்ட், ஆடியோ ரெக்கார்ட் செய்வது தான் வேலை என்று பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை வைத்தார் திருச்சி சூர்யா.

இந்த நிலையில் ஏற்கனவே எதிர்க்கட்சிகளால் ஹனி ட்ராப் பிரச்சனை கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், தன்னை அமர் பிரசாத் திட்டமிட்டு வரவழைத்து ஹனி ட்ராப் செய்துள்ளார் என்று திருச்சி சூர்யா தெரிவித்தது மேலும் அரசியல் வட்டாரத்தில் மிக பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் திருச்சி சூர்யா பேசியது குறித்து அலிசா விளக்கம் கொடுத்துள்ளார்.

அதில், தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட திருச்சி சூர்யா,பாஜக தலைவர் அண்ணாமலை கொடுத்து தொடர்பு கொண்டு உங்களுக்கு அரசியல் ஆலோசனை வழங்க வேண்டும் என்று சொன்னதாக பேசினார். நான் அவரை தொலைபேசியில் பேச முடியாது நேரில் அலுவலகத்தில் வந்து என்னை சந்தித்து பேசுங்கள் என்று தெரிவித்தேன். ஒரு நாள் அலுவலகம் அந்த திருச்சி சூர்யா தன்னிடம், தான் சேலை கட்டும் விதம் சரியில்லை என்று தெரிவித்தார்.

மேலும் உடற்பயிற்சி செய்யும் பொழுது ஸ்லீவ்லஸ் போடக்கூடாது. இதனால் பாஜக மூத்த தலைவர்கள் தவறாக உங்களை நினைப்பார்கள் என்று, என்னுடைய உடலின் பாகங்கள் பற்றி மற்றும் என்னுடைய வயிறு பற்றியும் திருச்சி சிவா பேசினார். உடனே நான் இங்கிருந்து நீங்கள் கிளம்புங்கள் என்று தெரிவித்துவிட்டு, திருச்சி சூர்யா தொலைபேசி எண்ணை நான் பிளாக் செய்து விட்டேன். அதன் பின்பு அவரிடம் எந்த தொடர்பும் நான் வைத்துக் கொள்ளவில்லை என அலிசா விளக்கம் கொடுத்து இருந்தார்.

இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் பாஜக வெற்றி அடைய வேண்டும் என்று, தமிழக பாஜகவின் வளர்ச்சிக்கு கடுமையாக அண்ணாமலை உழைத்து வந்தாலும் கூட கட்சிக்குள் அரசியல் கத்து குட்டிகள் செய்யும் செயல்கள் அனைத்தும் அண்ணாமலை படும் கஷ்டம் அனைத்தும் வீணாகி கொண்டிருக்கிறது, மேலும் கட்சிக்கு மிகப்பெரிய அவப்பெயரையும் ஏற்படுத்தி வருகிறது என்று வருத்தம் தெரிவிக்கும் பாஜகவினர்.

இதற்கு முன்பு திமுக மற்றும் பாஜக இடையில் நடக்கும் விவாத நிகழ்ச்சியில் நடக்கும் கார சார விவாதம் வைரலாகி மக்கள் மத்தியில் பேசப்படும், ஆனால் தற்பொழுது பாஜகவினரே அவர்களுக்குள் மலமாடு என்பதும், ஓட்ட வாய் என்பதும் இப்படி மாற்றி மாற்றி, அரசியல் களம் என்றால் என்னவென்று கூட தெரியாதவர்களால், அவர்கள் அடிக்கும் கூத்துக்கு பாஜக மாநில தலைவர் ஒரு முடிவு கட்ட வேண்டும் என பாஜக தொண்டர்கள் வேதனை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலை குறித்து முதல்வருக்கு சென்ற முக்கிய ரிப்போர்ட்… அதிர்ச்சியில் முதல்வர் குடும்பம்…