காயத்ரியை பொறி வைத்து பிடித்த அண்ணாமலை…கையும் களவுமாக காயத்ரி சிக்கியது இப்படி தான்..!

0
Follow on Google News

கர்நாடகா மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை திடீரென தன்னுடைய வேலையை ராஜினாமா செய்து விட்டு அரசியல்வாதியாக உருவெடுத்து, உடனே பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டு மிகக் குறுகிய காலத்தில் பாஜகவின் தலைவர் ஆனார் அண்ணாமலை. இது அனைத்துமே குறுகிய காலத்தில் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள்.

ஆனால் பலருக்கு இது குழப்பமாக இருந்தாலும், இதன் பின்னணியில் டெல்லி பாஜக தலைமையும், முக்கியமாக பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா இருப்பதாக கூறப்படுகிறது. அண்ணாமலை பாஜகவில் இணைந்த பின்பு துணைத் தலைவராக இருந்த போதே கட்சியின் ஒன்றிய நிர்வாகிகள் முதல் மாநில நிர்வாகிகள் வரை ஒவ்வொருவரின் செயல்பாடு தீவிரமாக கண்காணிக்க தொடங்கி விட்டார். இது அனைத்துமே அடுத்த மாநில தலைவராவதற்கு முன்பு டெல்லி பாஜக தலைமை கொடுத்த அசைன்மென்ட் என்கின்றனர்.

பாஜகவின் மாநில தலைவரான அண்ணாமலை முதல் கட்டமாக பல மாவட்ட தலைவர்களை அதிரடியாக மாற்றினார். அதன் பின்பு மாநில நிர்வாகிகளையும் மாற்றம் செய்து திறமைக்கும், உழைப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் வாய்ப்புகளை கொடுத்து வந்தார் அண்ணாமலை. பாஜக வளர்ச்சிக்கு எந்த வகையிலும் துணையாக இல்லாத காயத்ரி ரகுராம் கலை கலாச்சார பிரிவு தலைவர் பதவியில் இருந்து துக்கப்பட்டார்.

பின்பு சில நாட்களில் வெளிநாடு வாழ் தமிழர் பிரிவில் தலைவராக பதவி கொடுத்து ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுத்தார் அண்ணாமலை. பொதுவாக அண்ணாமலை ஒருவர் தவறு செய்வதை கணித்து விட்டால், அவர் எந்த ஒரு ரியாக்ஷனும் காட்டாமல் வழக்கம்போல் அவர்களுடன் சிரித்து பேசி கடந்து சென்று விடுவார். ஆனால் தொடர்ந்து அவர்களை கண்காணித்து அவர்கள் குறித்த தகவல்களை சேகரித்துக் கொண்டுதான் இருப்பார் அண்ணாமலை.

அந்த வகையில் கடந்த மாதம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனை காயத்ரி ரகுராம் சந்தித்த தகவல் அண்ணாமலையின் கவனத்திற்கு சென்றது உடனே, அதற்கு எந்த ஒரு ரியாக்ஷனும் செய்யாத அண்ணாமலை அடுத்தடுத்து காயத்ரி ரகுராமின் நடவடிக்கைகளை கண்காணிக்க தொடங்கியுள்ளார். பொதுவாக ஒருவர் கட்சியில் தவறு செய்தால் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை கொடுக்கக் கூடியவர் அண்ணாமலை. திரும்பத் திரும்ப தொடர்ந்து தப்பு செய்யும் போது தான் அவர்களை கட்சியிலிருந்து இருந்து தூக்கும் முடிவுக்கு வருவார்.

அந்த வகையில் அடுத்தடுத்து வாய்ப்புகளை காயத்ரி ரகுராமுக்கு உருவாக்கி தந்தவர் அண்ணாமலை. ஆனால் அண்ணாமலைக்கு எதிராகவே காயத்ரி ரகுராம் செயல்பட்டு வந்தது அவருடைய கவனத்திற்கு சென்று உள்ளது. மேலும் காயத்ரி பின்னணியில் யாரெல்லாம் ஸ்லிப்பர் செல் போன்று செயல்படுகிறார்கள் என்கின்ற தகவலும் அண்ணாமலைக்கு சென்றுள்ளது.

இருந்தும் அதிர்ச்சி அடையாமல் காயத்ரி ரகுராம் அரசியல் விளையாட்டை விளையாட விட்டு வேடிக்கை பார்த்தார் அண்ணாமலை. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே அண்ணாமலைக்கு எதிராக காயத்ரி தொடர்ந்து சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து வந்த நிலையில், அதில் உச்ச கட்டமாக திருச்சி சிவா ஆடியோ விவகாரத்தை காயத்ரி ரகுராம் ஊதி பெரிதாக்கி அதை அண்ணாமலைக்கு எதிராக திசை திருப்ப முயற்சித்தார்.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சபரீசனை நேரில் காயத்ரி சந்தித்தது முதல் அவர் குறித்த அனைத்து தகவல்களையும் சேகரித்து வைத்த அண்ணாமலை, பல்வேறு காரணங்களுக்காக காயத்ரி ரகுராமை கட்சியிலிருந்து நீக்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் காயத்ரி பின்னணியில் இருந்து செயல்பட்டவர்கள் பட்டியலும் அண்ணாமலை கையில் இருப்பதால், காயத்ரி பின்னனியில் இருந்து செயல்பட்டவர்கள் தற்பொழுது கடும் பீதியில் இருந்து வருவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.