நேரடியாக களத்தில் இறங்கிய அஜித்… கதிகலங்கி நிற்கும் விஜய்.. அஜித் பிடிவாதத்திற்கு என்ன காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

வரும் பொங்கல் பண்டிகையின் போது அஜித் நடிப்பில் துணிவு மற்றும் விஜய் நடிப்பில் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாட்களில் ரிலீஸ் ஆவதால் இரண்டு ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்க்கும் பரபரப்பும் அதிகரித்து உள்ளது. இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் அதிகாலை சிறப்பு காட்சி வெளியிடும்போது இரு தரப்பு ரசிகர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டு அது கலவரமாக வெடிக்கும் அபாயம் ஏற்படலாம் என்கிற அச்சம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.

இதனால் மிகப் பெரிய சட்ட ஒழுங்கை ஏற்படுத்தும் நிலை உருவாகலாம். இருந்தும், துணிவு மற்றும் வாரிசு 2 படங்களும் ஒரே நாட்களில் வெளியாகுவதில் எந்த மாற்றமும் இல்லை, ஆனால் அதிகாலை காட்சிகளில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு அஜித் நடிக்கும் துணிவு படம் அதிகாலை ஒரு மணிக்கு வெளியிடப்படுகிறது, அதன் பின்பு விஜய் நடிப்பில் வாரிசு படம் அதிகாலை 4 மணிக்கு வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் அஜித் படங்களை விட விஜய் படங்கள் தான் அதிக வசூலை பெற்றுள்ளது. அந்த வகையில் அஜித்தை விட விஜய் தான் முன்னணியில் இருக்கின்றார் என்கின்ற ஒரு பிம்பத்தை உடைப்பதில் அஜித் இம்முறை பிடிவாதமாக இருக்கிறார். அந்த வகையில் விஜய் நடிப்பில் வாரிசு படம் வெளியாகும் அதே தேதியில் தன்னுடைய படத்தை வெளியிட்டு யார் உயர்ந்தவர்கள் என்று பார்த்து விட வேண்டும் என்பதில் அஜித் நேரடியாகவும் களத்தில் இறங்கி வேலை செய்ய தொடங்கியுள்ளார்.

தமிழக திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் துணிவு மற்றும் வாரிசு படம் பற்றி பலர் பேசி வருகையில் சத்தமே இல்லாமல் உலக அளவில் அஜித் நேரடியாக களம் இறங்கி வாரிசு படத்தை விட துணிவு படத்தை பெரும்பாலான திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார். பிரபல சினிமா தயாரிப்பாளர் லைகா சுபாஸ்கரன் தமிழ் திரையுலகில் ஒரு சிலருடன் மட்டுமே தொடர்பில் இருந்து வருகின்றவர்.

அந்த வகையில் அஜித்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வரக்கூடிய நபர் சுபாஸ்கரன். சமீபத்தில் அஜித் லண்டன் சென்றிருந்தபோது சுபாஸ்கரன் வீட்டிற்கு சென்று உணவு அருந்தி நீண்ட நேரம் அவருடன் செலவிட்டுள்ளார், மேலும் அஜித் நடிக்கும் அடுத்த படம் லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அஜித் குமார் நேரடியாகவே சுபாஷ் கரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உலக அளவில் ரிலீஸ் செய்யும் துணிவு படத்தின் எஃப் எம் எஸ் உரிமையை லைக்கா நிறுவனத்திற்கு பெற்று தந்துள்ளார்.

இதனை தொடர்ந்து உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் துணிவு படத்தை வெளியிடுவதற்காக சுபாஷ்கரனே நேரடியாக களமிறங்கி வேலை செய்து வருகிறார். மேலும் உலக அளவில் வாரிசு படத்தை ரிலீஸ் செய்வதற்கான உரிமையை புதிய விநியோகஸ்தர் ஒருவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த விநியோகஸ்தர்கள் பெரும்பாலான திரையரங்குகளில் நெருங்கிய தொடர்பு இல்லாதவர்.

இதனால் வாரிசு படம் மிகக் குறைந்த திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. இது துணிவு படத்தை உலக அளவில் வெளியிடும் லைக்கா நிறுவனத்திற்கு சாதகமாக இருப்பதால், தமிழக தமிழ்நாட்டில் போன்று உலக அளவில் துணிவு படத்தின் விற்பனை செம்ம ஜோராக நடந்து வருகிறது. அந்த வகையில், இம்முறை அஜித்தா.? விஜையா.? என்று ஒரு கை பார்த்து விட வேண்டுமென்று நேரடியாக களத்தில் இறங்கிய அடித்து ஆடிக்கொண்டிருக்கும் அஜித்தின் ஆட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் கதி கலங்கி நிற்கிறார் விஜய் என்கின்றது சினிமா வட்டாரங்கள்.