ஜெ, எடப்பாடியை தொடர்ந்து உதயநிதியிடம் கை கட்ட தயாராகும் விஜய்.. தப்பு மேல் தப்பு செய்யும் விஜய்..!

0
Follow on Google News

1991 முதல் 1996 வரை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா ஆட்சி முடியும் தருவாயில், மீண்டும் ஜெயலலிதா முதல்வரானால் இனி தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுத்தது, அப்போது ஆட்சி மாற்றத்திற்கே வழிவகுத்தது. இந்த சம்பவத்திற்கு பின்பு தன்னுடைய படங்களில் அரசியல் பஞ்ச், மேடைகளில் அரசியல் பேச்சின் காரணமாக ரஜினிகாந்த் இதோ அரசியல் வருகிறார் என்கின்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்தது.

ரஜினிகாந்த் பார்முலாவை பின்பற்றி நடிகர் விஜய் தனக்கென ஒரு ரசிகர் கூட்டம் உருவாக்கியபின்பு ஆடியோ வெளியீட்டு விழாவில் குட்டி கதை சொல்வது, அவ்வப்போது அரசியல் குறித்து கருத்து சொல்வது, தன்னுடைய படத்தின் அரசியல் வசனம் என்று தொடர்ந்து தனது ரசிகர்களை உசுப்பேத்திவிட்டு வருகிறார். இதற்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கருத்து தெரிவித்திருந்தாலும் தன்னுடைய கருத்தில் உறுதியாக இருக்கக் கூடியவர், எந்த இடையூறு வந்தாலும் அதை எதிர்கொள்வாரே தவிர தன்னுடைய கருத்தை வாபஸ் வாங்க மாட்டார்.

ஆனால் விஜய் நடிப்பில் வெளியான தலைவா படம் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோபத்திற்கு ஆளாகி படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டபோது, கைகட்டி அம்மா நீங்க தான் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று பரிதாபத்துடன் வீடியோ வெளியிட்டு, தலைவா படத்தை திரைக்கு கொண்டு வந்தவர் விஜய். இதன் பின்பு சில காலம் அரசியல் கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்த நிலையில், எடப்பாடி முதல்வராக வந்த பின்பு மீண்டும் ஆளும் எடப்பாடி அரசுக்கு எதிராக அரசியல் பஞ்ச் பேச தொடங்கினார் விஜய்.

அதே நேரத்தில் அவருடைய படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டபோது மரியாதை நிமித்தமாக எடப்பாடியை சந்திக்கிறேன் என்று அவருடைய படத்தில் இருந்த சிக்கலை தீர்த்துக் கொண்டார். விஜய் அரசியல் கருத்துக்கு ஒரு முறை அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுலா இந்திரா பேசுகையில், விஜய் ஒரு கருத்தை சொல்வதற்கு அவருக்கு தகுதி வேண்டும், உங்கள் படம் ஓட வேண்டும் என்பதற்காக எங்கள் அமைச்சர் பெருமக்களை கொள்ளை புறமாக வந்து பார்த்த சரித்திரம் எங்களுக்கும் தெரியும் என்று பகிரங்கமாக பேசினார்.

இந்நிலையில் தற்பொழுது உதயநிதியுடன் மோதல் போக்கை விஜய் கடைபிடிக்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் நடித்த வாரிசு படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தமிழ்நாட்டில் வங்கி வெளியிட முயற்சி செய்தது, ஆனால் நடிகர் விஜய் அதற்கு இடம் கொடுக்கவில்லை. இந்நிலையில் விஜய் படம் வெளியாகும் அதே தினத்தில் துணிவு படத்தை வாங்கி வெளியிடும் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் பெரும்பாலான திரையரங்குகளில் துணிவு படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.

இதனால் வாரிசு படத்திற்கு தியேட்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு தான் யார் என்பதை காண்பிக்கும் வகையில் விஜய் சமீபத்தில் தன்னுடைய ரசிகர்களை நேரில் அழைத்து பிரியாணி விருந்து கொடுத்து மீண்டும் தன்னுடைய அரசியல் விளையாட்டை ஆரம்பித்துள்ளார். இந்த சலசலப்புக்களை உதயநிதி கண்டு கொள்ளவில்லை. மேலும் விஜய்யின் பிரியாணி விருந்துக்கு பின்பு வாரிசு படம் அடுத்தடுத்து சிக்கலில் சிக்கியுள்ளது.

அனுமதி பெறாமல் விலங்குகளை பயன்படுத்தி வாரிசு படத்தின் ஒரு பாடல் காட்சி எடுக்கப்பட்டு வந்ததை கையும் களவுமாக பிடிப்பதற்காக ஒரு பத்திரிக்கையாளர் ஈடுபட்டுள்ளார். அப்போது பட குழுவினர் கண்டுபிடிக்க அந்த பத்திரிகையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் உச்சகட்டத்தை அடைந்ததும் பத்திரிக்கையாளரை விஜய் ரசிகர் ஒருவர் கடத்திச் சென்றுள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து விலங்கு நலவாரியம் வாரிசு பட குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர் மீது பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். இப்படி விஜய் தப்பு மேல் தப்பு செய்து வாரிசு படத்தை மிகப்பெரிய சிக்கலில் சிக்க வைத்து விட்டார், இந்நிலையில் வாரிசு படம் வெளியாகுமா என்கின்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன்பு ஜெயலலிதாவிடம் கைகட்டி வீடியோ வெளியிட்டது போன்று, தன்னுடைய படம் ஓடுவதற்காக எடப்பாடியை மரியாதை நிமித்தமாக விஜய் சந்தித்தது போன்று உதயநிதியிடமும் கைகட்டி விஜய் வீடியோ வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என கூறப்படுகிறது.