முன்றி ஒரு பங்கு கூட கிடைக்கவில்லை.. ஆழம் தெரியாமல் காளை விட்ட விஜய்..!!

0

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படம், பிரச்சனை மேல் பிரச்சனையை சந்தித்து வருகிறது. தெலுங்கில் முன்னணி இயக்குனர் வம்சி மற்றும் தெலுங்கு பட பிரபல தயாரிப்பாளர் தில்ராஜ் ஆகியோர் கூட்டணியில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகிறது. அதே தேதியில் நடிகர் அஜித் நடிப்பில் துணிவு படமும் வெளியாவதால் இரண்டு படங்களுக்கான போட்டிகள் தற்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட்ஸ் துணிவு படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை வாங்கியுள்ளது. அதே நேரத்தில் பொங்கல் பண்டிகைக்கு வரும் வாரிசு படத்தையும் வாங்கி வெளியிடுவதற்கு ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ் முயற்சி செய்தது. ஆனால் அதற்கு நடிகர் விஜய் இடம் கொடுக்கவில்லை. இதனால் பெரும்பாலான திரையரங்குகளில் உதயநிதி ஸ்டாலின் செல்வாக்கை பயன்படுத்தி துணிவு வெளியாவதால் வாரிசு படத்திற்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை.

மேலும், பண்டிகை நாட்களில் ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் தெலுங்கு படங்களுக்கு தான் திரையரங்குகளில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தெலுங்கு சினிமா துறவினர் தெரிவித்ததை தொடர்ந்து, அங்கேயும் வாரிசு படம் பெரும் பிரச்சனையில் சிக்கியுள்ளது. இந்நிலையில் வாரிசு படம் தங்கள் கம்பெனிக்கு கிடைக்கவில்லை என்பதால் உதயநிதி ஸ்டாலின் தரப்பிலிருந்து வாரிசு படம் வெளியாவதற்கு மிகப்பெரிய தடையாக இல்லை என்கின்ற ஒரு செய்தி வெளியானது.

இருந்தாலும் ரெட் ஜெயன்ட் மூவிஸ்ன் துணிவு படத்தை வாங்கி வெளியிடும் விநியோகஸ்தர்கள் இது உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் படம் என்று திரையரங்குகளுக்கு அழுத்தம் கொடுத்து பெரும்பாலான திரையரங்குகளில் துணிவு படத்தை வெளியிடுவதற்கான விற்பனை செய்துள்ளனர். கும்பகோணத்தில் உள்ள ஐந்து திரையரங்குகளில் நான்கு திரையரங்குகள் துணிவு படம் வெளியிடப்படுகிறது.

மீதமிருக்கும் ஒரே ஒரு திரையரங்கு மட்டுமே வாரிசு படம் வெளியிடுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் வாரிசு படம் வெளியிடும் அந்த ஒரு திரையரங்கமும் மலைக்கு கூட மக்கள் ஒதுங்காத ஒரு குப்பை திரையரங்கு என்று கூறப்படுகிறது. இருந்தாலும் விநியோகஸ்தர்கள் தான் ரெட் ஜெயண்ட் மூவிஸ்க்கு பெருமளவு லாபத்தை ஈட்டு தருவார்கள் என்பதால் அவர்களின் நடவடிக்கைகளை கண்டும் காணாமல் இருக்கிறார் உதயநிதி என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வாரிசு படத்தை உதயநிதி ஸ்டாலின் தரப்பில் இருந்து வெளியிட கேட்ட போது விஜய் கொடுத்திருந்தால் இப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டிருக்காது. ஆழம் தெரியாமல் காளை விட்டு தற்பொழுது பரிதாப நிலையில் விஜய் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. விஜய் கோபத்தில் செய்த முடிவு தற்பொழுது வாரிசு படத்தின் தயாரிப்பாளர்க்கு பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.