காயத்ரி ரகுராம் – திருமா சந்திப்பு… பின்னணியில் எடப்பாடி… என்ன செய்ய போகிறது பாஜக.?

0

தமிழக பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருந்த நடிகை காயத்ரி தொடர்ந்து அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக மறைமுகமாக கருத்துக்களை தெரிவித்து வந்தது, மேலும் பாஜகவின் ஏற்பட்ட பல்வேறு சர்ச்சைகளின் காரணமாக பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்பு, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை நேரடியாகவே மிக கடுமையாக விமர்சனம் செய்ததை தொடர்ந்து நிரந்தரமாக பாஜகவில் இருந்து காயத்ரி நீக்கப்பட்டார்.

பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட பின்பு காயத்திரி ரகுராம் முழு நேரமும் பாஜக மற்றும் அண்ணாமலைக்கு எதிராக கடுமையாக எதிர்த்து வந்தவர், இந்த நிலையில் பாஜகவில் இருந்த போது விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளனை மிகத் கடுமையாக எதிர்த்தவர் நடிகை காயத்ரி ரகுராம். இந்நிலையில் தற்பொழுது பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம், சமீபத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளனை நேரில் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும் திருமாவளவன் – காயத்ரி ரகுராம் சந்திப்பின் பின்னணி குறித்து சில தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இருந்து வெளியேறிய மதுரை டாக்டர் சரவணன், சமீபத்தில் எடப்பாடி தலைமையிலான அதிமுகவில் தன்னை இணைந்து கொண்டார். டாக்டர் சரவணன் திமுகவில் இருந்து பாஜகவில் இணைவதற்கு முக்கிய பங்காற்றியவர் காயத்ரி ரகுராம்,

அந்த வகையில் சரவணனை பின்பற்றி விரைவில் எடப்பாடி தலைமையிலான அதிமுகவில் காயத்ரி ரகுராம் இணைவார் என்கிற செய்தி வெளியானது. ஆனால் சமீப காலமாக எடப்பாடி தலைமையிலான அதிமுக மற்றும் பாஜக இடையில் உரசல் போக்கு தொடர்வதால், இந்த சமயத்தில் காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்தால் அது பாஜக தரப்பில் இருந்து கடுமையான எதிர்வினையை சந்திக்க நேரிடும் என்பதால் சில காலம் காயத்ரி ரகுராமை காத்திருக்க சொல்லி இருக்கிறதாம் எடப்பாடி தலைமையிலான அதிமுக தரப்பு.

இந்த நிலையில் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக இடம்பெறுவதற்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதால், திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேறும் கட்டாயம் அவருக்கும் ஏற்படும், ஆகையால் திருமாவளவனை தன்னுடைய கூட்டணியில் இடம் பெற செய்வதற்கான கூட்டணி பேச்சுவார்த்தைக்காக எடப்பாடியால் நியமனம் செய்யப்பட்டுள்ள நபர் தான் காயத்ரி ரகுராம் என்றும்.அதன் காரணமாகவே திருமா – காயத்ரி ரகுராம் சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் உச்சநீதிமன்றம் அதிமுக வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழகியுள்ளதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு திருமா தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், அடிப்படை தொண்டனாக அரசியல் வாழ்வைத் தொடங்கிய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக உறுதிப்பட்டிருப்பது அவரது வலுவான ஆளுமைக்குச் சான்றாக உள்ளது. அவருக்கு எமது வாழ்த்துகள். இவ்வாய்ப்பு மீண்டும் பாஜக’வைச் சுமப்பதற்குப் பயன்படுமேயானால் இங்கு யாவும் பாழே. என்று திருமா தன்னுடைய வாழ்த்து செய்தியில் எடப்பாடியை புகழ்ந்து பாஜகவை தாக்கியுள்ளது, பாஜக அல்லாத அதிமுகவுடன் கூட்டணிக்கு தயார் என்கிற மறைமுக சமிக்கை தான் என கூறப்படுகிறது.