2025 சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா கலந்துகொள்ளுமா? ரசிகர்கள் கவலை!

0

இந்திய அணி கடந்த 2008 க்குப் பிறகு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதில்லை.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு நாட்டு அரசியல் சூழல் காரணமாக இரு நாட்டு தொடரில் கலந்து கொள்வதில்லை. அதுபோல பாகிஸ்தானுக்கும் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்வதில்லை.

ஐபிஎல் போட்டிகளிலும் பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் விடுவதில்லை. இந்தியா போலவே சில நாடுகளும் பாதுகாப்புக் காரணங்களால் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதில்லை.
இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பைத் தொடர் பாகிஸ்தானில் நடக்கும் என ஐசிசி அறிவித்துள்ளது.

இதனால் இந்திய அணி அந்த கோப்பையில் கலந்துகொள்ளுமா என்ற சந்தேகத்தை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் எழுப்பி வருகின்றனர். இது சம்மந்தமாக பேசியுள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் 2025 ஆம் ஆண்டு உள்ள சூழ்நிலைகளை ஆராய்ந்து அதற்கேற்றார்போல முடிவு எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.அமைச்சரின் இந்த தெளிவில்லாத பதிலால் குழப்பமே நீடிக்கிறது. ஒருவேளை இந்தியா கலந்துகொள்ளாத பட்சத்தில் மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.