ஆரம்பமே அமர்க்களம்… ராகுல் டிராவிட்டுக்கு சிறப்பான வரவேற்புக் கொடுத்த இந்திய அணி!

0

இந்திய அணி நியுசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியை வெற்றி பெற்று புதிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு சிறப்பான வரவேற்பைக் கொடுத்துள்ளனர். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நடந்த முதல் டி 20 தொடரை இந்திய அணி எளிதாக வெற்றி பெற்று ராகுல் டிராவிட்டுக்கு பரிசாக அளித்துள்ளனர்.

நேற்று நடந்த இரண்டாவது டி 20 போட்டியில் முதலில் ஆடிய நியுசிலாந்து அணி 153 ரன்கள் சேர்த்தது. இந்தியாவின் அஸ்வின் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் சிறப்பாக பந்துவீசினர். அதையடுத்து ஆடிய இந்திய அணி தொடக்க ஜோடி சிறப்பாக ஆடியது. தொடக்க வீரர்கள் ராகுல் மற்றும் ரோஹித் ஷர்மா இருவரும் அரைசதம் அடித்து சிறப்பான தொடக்கத்தைக் கொடுக்க,

அதன் பின்னர் வந்த வீரர்கள் அணியை எளிதாக வெற்றியை நோக்கி 18 ஆவது ஓவரிலேயே அழைத்துச் சென்றனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது. அடுத்த போட்டி நாளை கொல்கத்தாவில் நடக்க உள்ளது.