உண்மைக் கதை அடிப்படையில் கமல் & ரஞ்சித் திரைப்படம்!

0
Follow on Google News

கமல்ஹாசன் நடிப்பில் பா ரஞ்சித் இயக்க உள்ள படம் ஒரு உண்மைக் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இயக்குனர் பா ரஞ்சித் விரைவில் கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதை இரு தரப்புமே மறுக்காததால் உண்மையாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். இந்நிலையில் இந்த படத்தைப் பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் கதைக்களம் உண்மை சம்பவம் ஒன்றின் அடிப்படையில் உருவாக உள்ளதாம். அது என்ன என்பதை சஸ்பென்ஸ் ஆக படக்குழு வைத்துள்ளனர். சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை மற்றும் ஜெய் பீம் ஆகிய படங்கள் உண்மை சம்பவத்தை தழுவி அமைக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் படத்துக்குப் பிறகு கமல் நடிப்பு மற்றும் திரைக்கதையில் 7 படங்கள் உருவாக உள்ளதாம்.