ஆஷஸ் தொடர் முதல் போட்டி… இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை வச்சு செய்த ஆஸி பவுலர்கள்!

0

இன்று தொடங்கிய ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் 100 ஆண்டு பாரம்பரியம் கொண்ட ஆஷஸ் தொடர் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.

இன்று பிரிஸ்பேன் நகரில் தொடங்கிய முதல் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. பேட் செய்ய இறங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆஸி அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் தாக்குதலில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் வரிசையாக ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

இதனால் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து சுருண்டது. ஆஸி அணியின் புது கேப்டன் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.