பிசிசிஐ மற்றும் ரோஹித் ஷர்மாவை சீண்டும் விதமாக ஆர் சி பி டிவீட்!

0
Follow on Google News

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது ஏன்? முதல் முறையாக மௌனம் கலைத்த கங்குலி! தென் ஆப்பிரிக்காவுக்கு செல்லும் கிரிக்கெட் அணியில் ஒரு நாள் தொடருக்கான கேப்டன் பொறுப்பு ரோஹித் ஷர்மா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தாலும், ஏற்கனவே இதற்கான அறிகுறிகள் தெரிந்தன. மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக செயல்பட்டு வரும் கோலி, ஐசிசி கோப்பைகளை வெல்லவில்லை என்பது ஒன்றே குறையாக சொல்லப்படுகிறது. அதனால் ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோஹித் ஷர்மாவுக்கு கேப்டன் பதவி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது.

இந்நிலையில் கோலி தானாகவே பதவி விலகுவார் என 48 மணிநேரம் காத்திருந்ததாகவும், அவர் இறங்கி வராததால் நீக்கப்பட்டதாகவும் பிசிசிஐ வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கோலி நீக்கப்பட்டு ரோஹித் ஷர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி விளக்கம் அளித்துள்ள போதும் இந்தியாவின் வெற்றிகரமான ஒரு நாள் அணிக் கேப்டனான கோலிக்கு இப்படி ஒரு வழியனுப்புதல் நியாயமற்றது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் கோலியை புகழ்ந்து பிசிசிஐ மற்றும் புதிய கேப்டன் ரோஹித்தை சீண்டும் விதமாக ஆர் சி பி அணி வெளியிட்டுள்ள டிவீட்டில் ‘தலைவன். போர்வீரன். உத்வேகம். ஒரே ஒரு கிங் கோலிதான் இருக்க முடியும். உங்களுடைய கிரிக்கெட் பாணியைதான் எதிர்காலம் பின்பற்ற போகிறது.’ என்று கூறியுள்ளது.