வெளியானது வெந்து தணிந்தது காடு படத்தின் வித்தியாசமான டீசர்!

0

மாநாடு படத்தின் வெற்றி சிம்புவின் மார்க்கெட்டை பல மடங்கு விரிவடைய செய்துள்ளது. இரண்டாவது வாரத்திலும் வெற்றிகரமாக மாநாடு ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் சிம்புவின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக அவர் அடுத்து நடிக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் டீசரை இன்றி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அறிவித்தப்படி இன்று மதியம் 1.26 மணிக்கு ஏ ஆர் ரஹ்மான் குரலில் தொடங்கும் பாடலோடு ஒரு நிமிட டீசர் காட்சி வெளியானது. திருச்செந்தூரில் இருந்து சென்று மும்பையில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் இளைஞனாஜ சிம்பு நடித்திருப்பதாக டீசரை பார்க்கும் போது தெரிகிறது.

ஆக்ஷன் காட்சிகள் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்திருக்கும் விதமாக டீசர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டீசர் இணையத்தில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ள நிலையில் படம் மார்ச் மாதம் திரையைக் காண உள்ளது.