அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த வருடம் இந்திய பொருள்களுக்கான வரியை அதிகரித்து, இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தார். ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி அமெரிக்க வரி விதிப்பு குறித்து பேசுகையில், விவசாயிகள், மீனவர்கள், பால்வள உற்பத்தியாளர்களின் நலனில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது, அதற்காக என்ன விலை கொடுக்க வேண்டி இருந்தாலும் தயாராக இருக்கின்றோம் என தெரிவித்திருந்தார்.
மேலும் இந்தியாவின் பொருளாதாரத்தை முடக்கி, இந்தியாவை அடி பணிய வைக்க வேண்டும் என்கின்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மிரட்டலுக்கு, தக்க பாடம் புகட்டும் வகையில் அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக மாற்று வர்த்தகத்தை இந்தியா ஏற்பாடு செய்தது, அதாவது அமெரிக்காவுடன் தொடர்ந்து இந்த வரி விதிப்பு குறித்து பேச்சு வார்த்தையை இந்தியா நடத்திக் கொண்டிருக்க, மறுபக்கம் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா போன்ற இந்தியாவின் நட்பு நாடுகளுடன் வர்த்தகத்தை விரிவு படுத்துவதற்கான வேலைகளையும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மிக தீவிரமாக செயல்பட்டு வந்தது.

அமெரிக்காவின் வர்த்தக அழுத்தம் இந்திய பொருளாதாரத்தை எந்த விதத்திலும் பாதிக்காத வகையில் மாற்று வாய்ப்புகளை உடனே இந்தியா ஏற்பாடு செய்தாலும், ஆரம்பத்தில் பல சவால்களை எதிர் நோக்க வேண்டிய சூழல் இந்தியாவுக்கு இருந்தது. பின்பு அனைத்து சவால்களையும் சரி செய்து நிலையான வர்த்தகத்தை உலக சந்தைகளில் நிலை நிறுத்தியது இந்தியா.
இந்நிலையில் இந்தியா மாற்று சந்தைகளில் தன்னுடைய வியாபாரத்தை தொடங்கியதின் விளைவு அமெரிக்காவில் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களை பல பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டது, இதனை தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து செயல்படும் பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுடன் வணிக தொடர்பை எந்த விதத்திலும் பாதிக்காதபடி அமெரிக்கா நடந்து கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுக்க தொடங்கினார்கள்.
இது டோனல் ட்ரம்ப்ன் சர்வாதிகார முடிவுக்கு கிடைத்த சவுக்கடியாக மட்டுமில்லாமல், உள்நாட்டிலே ட்ரம்ப் க்கு எதிராக கடும் எதிர்ப்புகள் கிளப்பியது. இதன் பின்பு இந்தியா உடனான வர்த்தகத்தை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியில் இறங்கிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இந்தியாவுடனான சுமூக முயற்சிக்கான பேச்சுவார்த்தையை தொடங்கினார்.
இதனை தொடர்ந்து பல உலக நாட்டு தலைவர்கள் பிரதமர் மோடியை தொடர்ந்து அமெரிக்கா – இந்தியா இடையிலான வர்த்தக பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவருவதர்க்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன் பின்பு அமெரிக்கா இந்தியா மீது விதித்து இருந்த 50 சதவிகித வரியை 18 சதவிகிதமாக குறைத்து. இதன் மூலம் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் எந்த ஒரு பாதிப்பின்றி மீண்டும் வர்த்தகத்தை தொடங்கி இருக்கிறது இந்திய நிறுவனங்கள்.
மொத்தத்தில் அமெரிக்கா மிரட்டலுக்கு அடிபணியாமல், அதே நேரத்தில் அமெரிக்க உடன் நட்பு பாராட்டி கொண்டே பொறுமையாக சந்தையை மற்ற உலக நாடுகளில் விரிவு படுத்தி தன்னுடைய ராஜ தந்திர உலக அரசியலால் வல்லரசு நாடான அமெரிக்கவை தன் வழிக்கு கொண்டு வந்திருக்கிறார் பிரதமர் மோடி என உலக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

