வரும் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், திமுக – அதிமுக இரண்டு கட்சிகளும் கூட்டணியை உறுதி செய்வதிலும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியை ஒதுக்குவதிலும் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தென் இந்திய பார்வேர்ட் ப்ளாக் கட்சியின் நிறுவன தலைவர் திருமாறன் ஜிக்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மதுரை பாராளுமன்ற தொகுதியை பாஜக ஒதுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
கிட்ட தட்ட திருமாறன் ஜி மதுரை பாராளுமன்ற தொகுதியில் சுமார் 2 வருடமாக தேர்தல் பணியாற்றி களத்தை மதுரை பாராளுமன்ற தேர்தல் களத்தை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமான ஒரு சூழலுக்கு திருமாறன் ஜி தயார் செய்து வைத்து இருந்தார், ஆனால் கடைசி நேரத்தில் தொகுதி பங்கீட்டில் பாஜக தலைமைக்கு தன்னால் எந்த ஒரு தர்ம சங்கடமும் ஏற்பட்டு விடக்கூடாது என மதுரை பாராளுமன்ற தொகுதியை விட்டு கொடுத்த திருமாறன் ஜி,

தேர்தலின் போது தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு தேர்தல் பணியாற்றி, மதுரையில் பாஜக இரண்டாம் இடம் பிடிக்க திருமாறன் ஜி யின் பங்கும் மிக முக்கிய காரணமாக அமைந்து இருந்தது, இந்நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியை விட்டு கொடுத்த திருமாறன் ஜிக்கு இந்த முறை, வரும் 2026 சட்டசபை தேர்தலில் சீட் கொடுக்க பாஜக தலைமை திருமாறன் ஜி பெயரை டிக் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியில் கூட்டணி கூட்டணி கட்சிகளான அமமுக 1 தொகுதி, நேரடியாக பாஜக ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது, திருமாறன் ஜி 1 தொகுதியில் அவரே வேட்பாளராக களம் இறங்குகிறார், மீதம் உள்ள 7 தொகுதிகளில் அதிமுக நேரடியாக போட்டியிட இருப்பதாகவும், ஒரு வேலை தேமுதிக NDA கூட்டணிக்குள் வந்தால் அதிமுக கைவசம் இருக்கும் 7 தொகுதிகளில் ஒரு தொகுதியை தேமுதிகவுக்கு அதிமுக ஒதுக்கும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
தென் தமிழகத்தில் பெரும்பானமையாக இருக்க கூடிய சமூக மக்களின் பிரதிநிதியாக திகழ்ந்து வரும் திருமாறன் ஜி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட இருப்பது, குறிப்பாக தென் தமிழகத்தில் பெரும்பான்மையாக இருக்கும் முக்குலத்தோர் சமூகத்தின் வாக்குகளை மிக பெரிய அளவில் வரும் சட்டசபை தேர்தலில் NDA கூட்டணி அறுவடை செய்யும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
அந்த வகையில் தற்பொழுது தென் மாவட்டத்தில் திமுக கூட்டணிக்கு மிக பெரிய சவாலாக அமைத்துள்ளது NDA கூட்டணி. குறிப்பாக கடந்த 2021 சட்டசபை தேர்தலில் சென்னை மற்றும் டெல்ட்டா போன்ற பகுதிகளில் திமுக கூட்டணி மிக பெரிய அளவில் வெற்றி பெற்றாலும் கூட தென் மாவட்டத்தின் தலைநகரான மதுரையில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று பாதிக்கு பாதி என்கிற சமநிலையில் தான் திமுக கூட்டணியில் 2021 தேர்தல் முடிவுகள் அமைந்து இருந்தது.
இந்நிலையில் தற்பொழுது திமுக மீது மக்கள் மத்தியில் இருக்கும் கடும் அதிருப்தி, மேலும் தென் மாவட்டத்தில் செல்வாக்கு மிக்க தென் இந்திய பார்வேர்ட் பிளாக் , அமமுக, ஜான்பாண்டியன் போன்ற கட்சிகள் NDA கூட்டணியில் இடம் பெற்று இருப்பது மட்டுமின்றி திருமாறன் ஜி போன்ற தலைவர்கள் நேரடியாக வேட்பாளராக போட்டியிட இருப்பது, திமுகவினர் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

