முக ஸ்டாலினை அவமதிக்கும் ராகுல் காந்தி… கனிமொழி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி… கூட்டணியில் இருந்து வெளியேற்றப்படும் காங்கிரஸ்…

0
Follow on Google News

காங்கிரஸ் திமுக இடையிலான உச்சக்கட்ட மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பரபரப்புக்கு மத்தியில், சமீபத்தில் டெல்லியில் திமுக எம்பி கனிமொழி சுமார் 45 நிமிடங்கள் ராகுல் காந்தி மற்றும் சோனியா ஆகியோரை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசி இருக்கார். இந்த பேச்சுவார்த்தை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை என்றாலும் கூட,

இதுவரை திமுக தரப்பிலிருந்து, காங்கிரஸ் தரப்பிலிருந்தோ, காங்கிரஸ் திமுக கூட்டணி தொடர்கிறது என்கின்ற எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை. அதன் அடிப்படையிலேயே கனிமொழி சுமார் 45 நிமிடம் ராகுல் காந்தி, சோனியா சந்திப்பு தோல்வியை தழுவியிருக்கிறது என கூறப்படுகிறது.

இந்த நிலையில் கனிமொழி உடனான சந்திப்புக்கு பின்பு, அதற்கு அடுத்த நாள் காங்கிரஸ் எம்பி 3 நபர்களை நேரில் அழைத்து ஆலோசனை நடத்தி இருக்கிறார் ராகுல் காந்தி, அந்த மூன்று எம்பிகளில் ஒருவர்தான் மாணிக்கம் தாகூர், அதாவது தொடர்ந்து திமுகவை மிக கடுமையாக விமர்சனம் செய்து வரும் மாணிக்கம் தாகூர் மீது காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தரப்பிலிருந்து தொடர்ந்து வலியுறுத்தி வரும் இந்த நேரத்தில், வரும் 2026 சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்த ஆலோசனையில் மாணிக்கம் தாகூரை அழைத்து பேசியிருக்கிறார் ராகுல் காந்தி.

அந்த வகையில் திமுகவுடன் கூட்டணிக்கு ராகுல் முழுமையாக சம்மதிக்கவில்லை என்கிறது டெல்லி வட்டாரம். இந்த நிலையில் இதற்கு முன்பு காங்கிரஸ் தரப்பில் ஐவர் குழு முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து அதிக தொகுதிகளும் ஆட்சியில் பங்கு , அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கை வைத்த போது, கடந்த டிசம்பர் 15ஆம் தேதிக்குள் திமுக தரப்பிலிருந்து நல்ல பதில் வரும் என்று காங்கிரஸ் எதிர்பார்த்ததாகவும்,

ஆனால் திமுக தரப்பில் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்துவதற்காக உயர்மட்டத்தில் ராகுல் காந்தி அல்லது சோனியா காந்தி , பிரியாங்க காந்தி ஆகியோர் திமுகவுக்கு அழைப்பு விடுத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் அல்லது முதல்வர் மு க ஸ்டாலினை சந்திக்க வேண்டும் என்றால் காங்கிரசின் மிக மூத்த தலைவர்கள் சந்திக்க வேண்டும்.

காங்கிரஸ் அமைத்த ஐவரு குழுவை முதல்வரை சந்திக்க விட்டு கூட்டணி தொகுதி பேச்சுவார்த்தை நடத்துவது முதல்வரை அவமதிக்கும் செயல் என்று திமுக தரப்பு கருதுவதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்வருக்கு சமமான ஒரு நபரை முதல்வரை சந்தித்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தாமல் தொடர்ந்து ராகுல் காந்தி திமுகவையும் முதல்வரையும் அவமதித்து வருவதாக திமுக கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் ராகுல் காந்தி எந்த ஒரு இறுதி முடிவு எடுக்காமல், காங்கிரஸ் எம்பிகளை தூண்டிவிட்டு திமுகவுக்கு எதிராக பேசி வந்த நிலையில், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த திமுக தலைமை, கோ தளபதி மற்றும் ஆர்எஸ் பாரதியை தூண்டிவிட்டு காங்கிரஸுக்கு எதிராக பேச வைத்திருக்கிறது என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

அதே நேரத்தில் கடந்த முறை காங்கிரசுக்கு 26 தொகுதிகள் திமுக ஒதுக்கிய நிலையில், இவர்கள் பேசிய பேச்சிற்கு இந்த முறை 21 தொகுதிகள் தான் கொடுக்கப்படும், ஆட்சியிலும் அதிகாரத்திலும் எந்த பங்கும் இல்லை, இஷ்டம் என்றால் இருக்கட்டும் இல்லையென்றால் வெளியேறட்டும் என்று திட்டவட்டமாக முதல்வர் மு க ஸ்டாலின் திமுக மூத்த தலைவர்களிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here