திருப்பரங்குன்றம் விவகாரம் மிக பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா முதல் முதலில் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று வழிபட முடிவு செய்கிறார். ஆனால் அவருடைய உடன் நலம் கருதி, மருத்துவர்கள் ஹெச் ராஜா திருப்பரங்குன்றம் மலை மீது ஏற வேண்டாம் என அட்வைஸ் செய்கிறார்கள்.
ஆனால் தன்னுடைய உடல் நலம் குறித்து சிறிதும் பொருட்படுத்தமால்,இது தன்னுடைய இறை நம்பிக்கை சார்ந்த விஷயம் நிச்சயம் மலை ஏறியே தீருவேன் என திருப்பரங்குன்றம் மலை மீது ஏறினார் பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா. மலை ஏறும்போது ஹெச் ராஜா வயதை கருத்தில் கொண்டு அவருடன் சென்ற சிவலிங்கம் அண்ணா கவனமாக மெதுவாக செல்வோம் என்று சொன்னாலும் கூட, மற்றவர்களை விட விறுவிறுப்பாக வேகமாக திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்து திரும்பினார் ஹெச் ராஜா.

இந்நிலையில் மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீப தூணில் தீபம் ஏற்றுவோம் என திருப்பரங்குன்றம் பகுதி பெண்கள் மலை ஏற முற்பட்ட போது, அந்த பெண்கள் கைது செய்யப்பட்டனர். இந்த தகவலை உடனே ஹெச் ராஜா கவனத்திற்கு எடுத்து செல்கிறார் மாவட்ட தலைவர் சிவலிங்கம். உடனே சிவகங்கையில் இருந்து மதுரை வந்த ஹெச் ராஜா போலீசாரிடம் கடுமையாக வாக்குவாதம் செய்து கைது செய்யப்பட்ட பெண்களை நேரில் சந்தித்து, பின்பு அவர்கள் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுப்பட்டு, அனைவரும் விடுதலையாக துணை நின்றார் ஹெச் ராஜா.
இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சொந்தமான கல்லத்தி மரத்தில் ஏற்ற பட்ட கொடியை அகற்ற வேண்டும் என நீதிபதி ஜி ஆர் சாமிநாதன் உத்தரவிட்டும் கொடி அகற்றப்படாமல் இருந்தது. இந்த தகவல் அறிந்து ஹெச் ராஜா திருப்பரங்குன்றம் வந்தவர், தன்னுடைய உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் மலை மீது ஏற முயன்றார், போலீசார் தடுத்து நிறுத்த சுமார் 2 மணி நேரம் வாக்குவாதம் செய்து, மலை மீது உள்ள கல்லத்தி மரத்தை மாவட்ட தலைவர் சிவலிங்கம் உடன் சென்று பார்வையிட்டு மரம் எந்த பாதிப்புக்கும் உள்ளாக்கவில்லை என தெரிவித்து திரும்பினார்.
இப்படி தொடர்ந்து தன்னுடைய உடன் நிலையையும், வயதையும் பொறுத்தப்படுத்தாமல் தொடர்ந்து தான் சார்த்த கொள்கைக்காகவும், தன்னுடைய மத நம்பிக்கையாகவும் களமாடி வந்த பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜாவுக்கு தற்பொழுது உடல் நலம் சோர்வு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைவில் பூரண குணம் அடைந்து வீடு திரும்புவார் என பலரும் பிராத்தனை செய்து வருகிறார்.
இந்நிலையில் ஹெச் ராஜாவின் இந்து மாதத்திற்கான போராட்டம் என்பது நேற்று இன்று அல்ல பல வருடங்களுக்கு முன்பு கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு கோவில் பிரச்சனையில் தடியடிக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது, இப்படி தான் கொண்ட கொள்கையாகவும், தன்னுடைய மதம் சார்ந்த நம்பிக்கைக்காகவும், பொது வாழ்க்கையில் தன்னையே அர்ப்பணித்து கொண்டவர் தான் ஹெச் ராஜா என்கிறார்கள் அவர் சார்த்த வலது சாரி சிந்தனையாளர்கள்.
தமிழகத்தின் இந்துக்களின் ஐகான் என்று போற்றப்பட கூடிய ஹெச் ராஜா அவர்கள் தற்போது அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரத்த அழுத்தம் அல்லது சர்க்கரை அளவில் ஏற்பட்ட திடீர் மாறுபாடு காரணமாக இந்த மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

