திருமா போட்ட கண்டிஷன்…. ஓகே சொன்ன முக ஸ்டாலின்… இப்ப தெரிகிறதா திருமா பவர்….

0
Follow on Google News

சட்டசபை தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே கிட்டதட்ட கூட்டணியை உறுதி செய்த நிலையில், தேமுதிக, பாமகவின் ராமதாஸ் பிரிவு போன்ற சிறு சிறு கட்சிகள் மட்டுமே இன்னும் கூட்டணியை இறுதி செய்யாமல் இருக்கிறது, இந்த நிலையில் திமுகவுடன் ராமதாஸ் தரப்பு கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறது.

இந்த தகவல் அறிந்து ஏற்கனவே திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தை கட்சிகள் தலைவர் தொல் திருமாவளவன், ராமதாஸ் இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம் ஒருவேளை திமுக கூட்டணியில் ராமதாஸ் உள்ளே வந்தால் நாங்கள் வெளியேறி விடுவோம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியை இழக்க விரும்பாத முதல்வர் மு க திமுக தரப்பு, ராமதாசை தனித்துப் போட்டியிடுங்கள் உங்களுக்கு தேவையான உதவிகளை செய்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்கள் . இந்த நிலையில் ராமதாஸ் தரப்பு நடிகர் விஜயுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. சுமார் 30 தொகுதிகள் வரை விஜய் இடம் கேட்டு இருக்கிறது ராமதாஸ் தரப்பு.

அதுவும் 20க்கு மேற்பட்ட தொகுதிகள் வட மாவட்டங்களை குறிவைத்து கேட்டிருக்கிறது ராமதாஸ் தரப்பு , இது தொடர்பாக கட்சியினில் மூத்த நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசிக்கையில் நம்ம ஏற்கனவே வடமாவட்டங்களில் வலுவாக இருக்கிறோம், குறிப்பாக நம்முடைய கட்சி தொடங்கிய இடமும் கூட விக்கிரவாண்டி பகுதி, அப்படி இருக்கையில் வட மாவட்டங்களில் வலுவாக இருக்கும் இந்த சூழலில் ராமதாஸ் தரப்பு கேட்கும் 20க்கும் மேற்பட்ட தொகுதிகளை வடமாவட்டங்களில் கொடுத்து விட்டால் அது நமக்கு இழப்பாக இருக்கும்.

ஆகையால் ராமதாஸ் தரப்பு உடன் கூட்டணி தேவையில்லை என்ற முடிவுக்கு விஜய் வந்து விட்டதாகவும், இந்த தகவலையும் ராமதாஸ் தரப்புக்கு விஜய்யிடம் இருந்து சென்று இருக்கிறது . குறிப்பாக விஜய் ராமதாசை கூட்டணியில் சேர்க்காமல் இருந்ததற்கு மற்றொரு முக்கிய காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது தமிழகம் முழுவதுமே குறிப்பாக வடமாவட்டங்கள் சென்னை உட்பட்ட பல பகுதிகளில் தலித் சமூக வாக்குகள் விஜயை நோக்கி திரும்பி இருக்கிறது.

இப்படி ஒரு சூழலில் ராமதாசை கூட்டணிக்குள் கொண்டு வந்தால் அந்த தலித் சமூக ஓட்டு நம் கைவிட்டு போய்விடும் என்ற அச்சமும் விஜய்க்கு எழுதியிருக்கிறது. அதனாலயே ராமதாசுடன் கூட்டணி என்கின்ற பேச்சுவார்த்தை வேண்டாம் என்கின்ற முடிவுக்கு விஜய் வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் செங்கோட்டையன் மூலம் தவேக உடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார்.

ஆனால் அவர் கேட்ட தொகுதி அதிகம் என்பதால் தாவெகா செங்கோட்டை கிருஷ்ணசாமிக்கு எந்த ஒரு பதிலும் சொல்லாமல் காலம் தாழ்த்தி வருவதாக தகவல் வெறியாகிறது. குறிப்பாக ஆறு தனி தொகுதி உட்பட மொத்தம் பத்து தொகுதிகளை கிருஷ்ணசாமி தொகுதி பட்டியலுடன் செங்கோட்டையனிடம் கேட்டிருக்கிறார. கிருஷ்ணசாமி தாவேக தரப்பில் பேசி பத்து நாட்கள் கடந்தும், தற்போது வரை தவெகவிலிருந்து எந்த பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பெரிதாக எதிர்பார்த்த காங்கிரஸ் விசிக, டிடிவி தினகரன் போன்ற கட்சிகள் கூட்டணிக்கு வரவில்லை, அதனால் வரும் தேர்தலில் தனித்து போட்டியிட்டு ஒரு கை பார்த்து விடுவோம் என்கின்ற முடிவில் விஜய் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது