கடந்த மாதம் கடலூரில் நடந்த தேமுதிக பொதுக்கூட்டத்தில் கூட்டணி குறித்த முடிவை அறிவிப்பார் பிரேமலதா விஜயகாந்த் என்று எதிர்பார்த்த நிலையில், அப்போது தொடர்ந்து கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது குறித்த நேரத்தில் யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்போம் என்று தெரிவித்தார் பிரேமலதா. இந்த நிலையில் அதிமுக திமுக ஆகிய இரண்டு தரப்பிடமே பேரம் பேசி வரும் பிரேமலதா விஜயகாந்த் தற்போது இரண்டு தரப்பிலும் பேரம்படியாததால் தனித்து விடப்படும் சூழலில் சிக்கி இருக்கிறார்.
சமீபத்தில் சென்னை வந்த பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்வில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் பங்கேற்க பாஜக ஏற்பாடு செய்தது. அந்த வகையில் மோடி சென்னை வருவதற்கு முன்பே பிரேமலதா விஜயகாந்த் கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கு தொடர்ந்து பாஜக அதிமுக இரண்டு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஆனால் பிரேமலதா விஜயகாந்த் அதிக தொகுதிகள் மற்றும் ராஜ்யசபா சீட் கேட்டதால் கூட்டணி இறுதி முடிவு ஏற்றப்படவில்லை. அதே நேரத்தில் மறுபக்கம் திமுகவுடன் தொடர்ந்து பிரேமலதா பேசி வந்த தகவல் அதிமுகவுக்கும் பாஜகவிற்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ஆனால் திமுகவும் பிரேமலதாவை கூட்டணிக்குள் கொண்டு வந்து உறுதி செய்யாமல் காங்கிரசின் நிலைப்பாடு என்ன என்று எதிர்பார்த்து தாமதப்படுத்தி வருகிறது.
அதாவது காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினால் தேமுதிகவை உள்ளே கொண்டு வரலாம் என்கின்ற திட்டத்தில் இருக்கும் திமுக. காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் தொடர்ந்தால் தேமுதிக கூட்டணிக்கு தேவையில்லை, அதையும் மீறி திமுக உடன் கூட்டணிக்கு தேமுதிக விருப்பம் தெரிவித்தால் அதிகபட்சம் தேமுதிகவுக்கு நான்கு சீட்டுகளுக்கு மேல் இல்லை,
அப்படி நான்கு சீட்டுகள் ஒப்புக்கொண்டால் கூட்டணிக்குள் வரலாம் என்கின்ற ஒரு நிலைப்பாட்டில் இருக்கிறதாம் திமுக. இப்படி ஒரு சூழலில் மீண்டும் சமீபத்தில் அதிமுக பக்கம் பிரேமலதா தரப்பு பேரம் பேசியிருக்கிறார். அப்போது இரட்டை இலக்கில் சட்டமன்றத் தொகுதிகள், மேலும் ஒரு ராஜ சபா சீட் வேண்டும் என்று கேட்டிருக்கிறார், இதற்கு எடப்பாடி பழனிச்சாமி ராஜ்யசபா சீட் என்கின்ற பேச்சுக்கே இடம் இல்லை.
ஏற்கனவே டிடிவி தினகரனுக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறோம். ஆகையால் தற்போது ராஜ்யசபா சீட் கொடுக்க எங்கள் கைவசம் இல்லை என்று கைவிரித்து இருக்கிறார். அதே போன்று இரட்டை இலக்கு என்கின்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஆறு சட்டமன்றத் தொகுதிகள் கொடுப்போம் என்று காராராக தெரிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
இதனைத் தொடர்ந்து திமுக பக்கமும் காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்தால் தேமுதிக தேவையில்லை என்கின்ற முடிவில் இருக்கிறது திமுக, அப்படி உள்ளே வந்தால் கூட நான்கு சீட்டு தான் என்கின்ற உறுதியான நிலைப்பாட்டில் திமுக இருக்கிறது. அதுமட்டுமல்ல எடப்பாடி பழனிச்சாமியும் பிரேமலதாவிடம் கறார் காட்ட தற்பொழுது வரும் சட்டசபை தேர்தலில் விஜயுடன் கூட்டணி சேருவாரா பிரேமலதா, அல்லது தனித்து போட்டியிடுவாரா என்கின்ற குழப்பம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் முன்பே அதிமுக பாஜக தரப்பு பிரேமலதாவிடம் பேசியபோது கௌரவமாக அந்த கூட்டணியில் இணைந்திருக்கலாம் ஆனால் பிரேமலதா அதிமுக – திமுக இரண்டு தரப்பிலும் பேரம் பேசி இறுதியில் இரண்டு தரப்பு கழட்டி விட தற்பொழுது பிரேமலதாவின் தவறான அரசியல் அணுகுமுறையால் பரிதாபத்தில் உள்ளது தேமுதிக கட்சி.

