தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல்… வெளியான புள்ளி விவரம்… திமுக அரசுக்கு தலைகுனிவு…

0
Follow on Google News

கோவை விமான நிலையம் அருகில் கல்லூரி மாணவி ஒருவர் , மூன்று பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழ்நாட்டை மட்டுமில்லை, இந்தியாவையே உலுக்கியுள்ளது. தன்னுடைய காதலனுடன் காரில் தனியாக பேசிக்கொண்டிருந்த மாணவியை, காரின் கண்ணாடியை உடைத்து, காதலனை கடுமையாக தாக்கி, வலுக்கட்டாயமாக தூக்கி சென்ற கும்பல், அந்த பெண்ணிடம் மிக மோசமாக நடந்து கொண்ட சம்பவம், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது இந்த சம்பவம்.

ஏற்கனவே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வருகிறது என எதிர்க்கட்சிகள் குற்றசாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், தற்பொழுது கோவை சர்வதேச விமான நிலையம் அருகே, கல்லூரி மாணவிக்கு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம், ஏற்கனவே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வருகிறது என எதிர்க்கட்சிகளின் குற்றசாட்டை உறுதி படுத்தும் வகையில் அம்பலமாகி உள்ளது.

தமிழகத்தின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை போன்ற தொழில் மற்றும் கல்வியில் மேலோங்கி இருக்கும் பகுதியில், போதை பொருட்கள் அதிகரித்து வருவதே, பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கி இருக்கிறது, மேலும் தற்பொழுது அரங்கேறி உள்ள கோவை விமான நிலையம் அருகில் மாணவிக்கு நிகழ்ந்துள்ள சம்பவம், பெண்கள் பாதுகாப்பு குறித்து தமிழகம் முழுவதுமே மிக பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வடமாநிலங்களில் எதோ ஒரு பகுதியில் சிறிய அளவில் நடந்தாலும், அதை தீவிரமாக கையில் எடுத்து அரசியல் செய்யும் திமுக, தற்பொழுது திமுக ஆட்சியில் அரங்கேறி வரும் பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதை, புள்ளி விவரங்கள் மிக தெளிவாக காட்டுகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பின்பு கடந்த நான்கு ஆண்டுகளில், பெண்களுக்கு எதிரான குற்றம் சுமார் 60 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றும்,

இதில் குறிப்பாக போக்ஸ்சோ வழக்குகள் மட்டும் சுமார் 52 சதவிகிதம் அதிகரித்துள்ளது என புள்ளி விவரங்கள் காட்டுகிறது. இது தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பில் திமுக அரசு அலட்சியம் காட்டுவதே காரணம் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது. தமிழக மக்களை பாதுகாப்பதிலும்,சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் கவனம் செலுத்தாமல், தமிழக சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதை விமர்சனம் செய்கின்றவர்களை வழக்கு பதிவு செய்து ஒடுக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது என எதிர்க்கட்சிகள் குற்றசாட்டி வருகிறார்கள்.

தவறை சூட்டி காட்டுகிறவர்களை அடக்கும் வகையில் திமுக அரசின் அதிகாரத் துஷ்பிரயோகம் தமிழ்நாட்டை ஆபத்தான வீழ்ச்சியில் தள்ளியுள்ளது என்பது கோவையில் மாணவிக்கு நடந்த கொடுமையை அமபலப்படுத்தி உள்ளது. தொடர்ந்து தமிழகத்தில் பாதுகாப்பற்ற சூழல், சட்டம் ஒழுங்கு பிரச்சனை என மிக பெரிய கேள்வி எழுந்துள்ள இந்த சூழலில் போலீஸ் துறையை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் முதல்வரின் அலட்சியமே காரணம் என்கிற விமர்சனமும் எதிர்க்கட்சிகள் மத்தியில் உண்டு.

கோவையில் நடந்த இந்த பாலியல் வன்கொடுமை நாட்டையே உலுக்கி இருக்கும் நிலையில், தமிழக பெண்கள் பாதுகாப்பு குறித்து மிக பெரிய கேள்வி எழுந்துள்ளது. மேலும் இது போன்ற குற்ற செயலுக்கு முக்கிய காரணம் போதை பொருட்கள் தமிழகத்தில் அதிகரித்தது தான் என்கிற குற்றசாட்டு பரவலாக இருந்து வரும் நிலையில், போதை பொருட்களை தடுக்க திமுக அரசு தவறி விட்டது என்கிற குமுறல் மக்கள் மத்தியில் உண்டு.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 2020 ஆண்களுடன், 2024 ஆண்டு திமுக ஆட்சியை ஒப்பிடுகையில், 404 கற்பழிப்பு சம்பவம் 471 ஆக சுமார் 16 சதவிகிதம் உயர்த்து இருப்பதாகவும், 892 ஆக இருந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் 1885 ஆக சுமார் 111% உயர்ந்து உள்ளதாகவும் வெளியாகியுள்ள தகவல் திமுக அரசுக்கு மிக பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது.