கடந்த 2021 சட்டசபை தேர்தலின் போது, தமிழ்கத்தில் மோடி எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு, எடப்பாடி எதிர்ப்பு போன்ற திமுக கட்டமைத்த பிம்பத்தின் காரணமாக, தமிழகத்தில் 133 தொகுதியில் திமுக வெற்றி பெற்றது. இந்நிலையில் வரும் 2026 சட்டசபை தேர்தலில் 200 தொகுதியில் வெற்றி பெற வேண்டும், 200 இலக்கை நோக்கி நகர வேண்டும் என பிரச்சாரத்தை தொடங்கிய திமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்குமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த நான்கரை ஆண்டு திமுக ஆட்சியில், திமுக அமைச்சர்கள் மீது உள்ள ஊழல் குற்றசாட்டு, தொடர்ந்து நடைபெற்று வரும் அமலாக்க துறை சோதனை, தமிழகத்தில் அரங்கேறி வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, என பல நெருங்கடியை சந்தித்து வரும் திமுக மீது தமிழக மக்களுக்கு பெரும்பாலும் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் தேர்தல் கள நிலவரம் என்ன என்று தெரிந்து கொள்வதற்காக இரண்டு தனியார் நிறுவனங்கள் மூலம் சர்வே எடுத்துள்ளது திமுக தலைமை.

அதில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு வேலை செய்த நிறுவனம் மற்றும் மற்றொரு தனியார் நிறுவனம் தொகுதி வாரியாக சர்வே எடுத்துள்ளது. அதில் தற்பொழுது சிட்டிங் அமைச்சர், சிட்டிங் சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் எப்படி உள்ளது என்றும், அவர்களுக்கு தொகுதியில் இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கு, சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் சமுதாய ரீதியான ஓட்டு வங்கி அவர்களுக்கென அந்தந்த தொகுதியில் எப்படி உள்ளது என சர்வே எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் திமுக அரசு மீது மக்களின் மனநிலை என்ன.? இப்படி எடுக்கப்பட்ட சர்வே ரிப்போர்ட்டில், பல சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதும், குறிப்பாக சொந்த தொகுதியிலே பல திமுக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வாக்கு மிக பெரிய அளவில் சரிந்துள்ளது சர்வே ரிப்போர்ட் மூலம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த நிலை தொடர்ந்தால் சுமார் 70 தொகுதிகள் தற்பொழுது திமுக கைகாசம் இருக்கும் தொகுதியில் இருந்து பறிபோகும் என்கிற ஷாக் சர்வே ரிப்போர்ட் திமுக தலைமைக்கு சென்று இருக்கிறது. மேலும் கடந்த 2011 சட்டசபை தேர்தலில் அதிமுக உடன் விஜயகாந்த் கூட்டணி அமைத்தது போன்று, அதிமுக உடன் விஜய் வரும் 2026 சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்தால், திமுக வரும் தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாது என்கிற சர்வே ரிப்போர்ட் ம், திமுக தலைமைக்கு சென்று இருக்கிறது.
இதனை தொடர்ந்து சொந்த தொகுதியிலே செல்வாக்கை இழந்துள்ள திமுகவை சேர்ந்த சுமார் 35 சட்ட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் 11 அமைச்சர்களுக்கு மீண்டும் போட்டியிட சீட் இல்லை என்கிற முடிவுக்கு திமுக தலைமை வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் குறிப்பாக வயதான மூத்த சீனியர் திமுக அமைச்சர்களுக்கு சீட் இல்லை என்றும்,அவர்களுக்கு பதில் அவர்கள் வாரிசுகளுக்கு சீட் கொடுக்கப்படும் என திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இரண்டு தனியார் நிறுவனங்கள் எடுத்துள்ள சர்வே ரிப்போர்ட்டை, உளவு துறை மூலம் கிராஸ் செக் செய்துள்ளது திமுக தலைமை, உளவு துறையும் அதை உறுதி செய்து இருக்கிறது. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வரை எளிதாக வெற்றி பெற்று விடுவோம் என மிதப்பில் இருந்த திமுக தலைமைக்கு தற்போதைய சர்வே ரிப்போர்ட் இடியாய் விழுந்த செய்தியாக அமைந்துள்ளது.
மேலும் சீனியர் தலைவர்கள் திமுகவில் இருந்து ஓரம் கட்டப்படுவது, சீனியர் தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், வரும் தேர்தலில் அவர்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதத்தில், திமுகவிற்கு எதிராக சில உள்ளடி வேளைகளில் ஈடுபட வாய்ப்பு உள்ளதால், வரும் 2026 சட்டசபை தேர்தல் திமுகவுக்கு மிக பெரிய சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

