இன்னும் சட்டசபை தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் இந்த தருணத்தில் தமிழக பெண்களுக்கு மகளிர் உரிமை தொகையாக 5000 அறிவித்து விளம்பரம் செய்து வருகிறது ஆளும் திமுக அரசு. கடந்த 2021 சட்டசபை தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சியாக இருந்த திமுக சுமார் 10 வருடங்களாக ஆட்சியில் இல்லை அந்த வகையில் மக்களிடம் வாக்குறுதியை இஷ்டத்துக்கு அள்ளி விட்டு எப்படியாவது ஆட்சிய பிடித்து விட வேண்டும் என கடந்த 2021 சட்டசபை தேர்தலுக்கு முன்பு திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகள் பெரும்பாலானவை இன்று முதல் நிறைவேற்றப்படவில்லை.
குறிப்பாக திமுக ஆட்சி அமைத்த உடன் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் திமுக தெரிவித்தது, பெண்களும் மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கப் போகிறது என்கின்ற நம்பிக்கையில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பெண்கள் திமுகவுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர வைத்தனர்.

ஆனால் ஆட்சிக்கு வந்து 28 மாதங்கள் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கொடுத்த தேர்தல் வாக்குறுதியான ஒவ்வொரு குடும்ப தலைவிக்குமான 1000 ரூபாய் வழங்கப்படவில்லை. இதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் போராட்டம், வாக்களித்த பெண்கள் எங்களுக்கு மாதம் ஆட்சிக்கு வந்தால் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பேன் என்று சொன்னீர்களே எங்கே என்று கொந்தளிக்க.!
ஒரு வழியாக ஆட்சிக்கு வந்து 28 மாதங்கள் கடந்து மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கியது திமுக. ஆனால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தேர்தலில் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அதை முழுமையாக நிறைவேற்றாமல், தகுதியின் அடிப்படையில் மகளிர்களுக்கு உரிமை தொகை வழங்கப்படும் என்று அறிவித்து பெண்களை ஏமாற்றியது திமுக அரசு.
இந்த நிலையில் தற்போது மகளிர் உரிமை தேகையாக 5000 ரூபாயை அறிவித்திருக்கும் திமுக அரசு, அதில் பிப்ரவரி மாதத்திற்கான ஆயிரம் ரூபாய் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான முன்கூட்டியே 2000 ரூபாய், மேலும் சிறப்பு கோடை உதவி தொகையாக 2000 என மொத்தம் 5000 ரூபாயை வழங்கி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இந்த பணம் என்னவோ மக்களின் வரிப்பணத்தில் இருந்தும் அரசு கஜானாவில் இருந்தும் தான் கொடுக்கப்படுகிறது, திமுகவினர் தங்கள் சொந்த பணத்திலிருந்து கொடுக்கப்படவில்லை என்றாலும் கூட, கடந்த 2021 இல் திமுக ஆட்சி அமைத்த பின்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் கோடை காலங்களில் ஏன் இத்தகைய சிறப்பு உதவி தொகையை வழங்கப்படவில்லை.?
அப்படியானால் இது மக்களின் நலன் சார்ந்து கொடுக்கப்பட்ட ஐந்தாயிரம் ரூபாயா.? அல்லது தேர்தல் வருகிறது வாக்குகளை அறுவடை செய்யப்பட வேண்டும் என்கின்ற நோக்கில் கொடுக்கப்பட்ட பணமா என்று மக்கள் மத்தியில் எதிர்ப்பு குரல் எழுந்து வருகிறது, மேலும் 5 ஆயிரம் கொடுத்த திமுக, ஆட்சிக்கு வந்து 28 மாதங்கள் கொடுக்காத மகளிர் உரிமை தொகை பாக்கி 28 ஆயிரம் பணம் எப்போது கொடுக்கும் என தமிழக பெண்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், கடந்த தேர்தலில் ஏமார்ந்து திமுகவுக்கு மக்கள் ஒட்டு போட்டது போன்று வரும் 2026 சட்டசபை தேர்தலில் வாக்களிக்க தயாராக இல்லை என்பதை பார்க்க முடிகிறது.

