அமலாக்கத்துறை ரேடாரில் முதல்வர் அலுவலகம்… தலையே சுத்தும் மெகா ஊழல்… இதில் மட்டுமே 1020 கோடியா.?

0
Follow on Google News

தமிழ்நாட்டின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையயில் மட்டுமே ரூ.1,020 கோடி அளவிலான முறைகேடு குறித்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது, மேலும் இது தொடர்பாக ஏற்கனேவே தமிழக காவல் துறை வழக்கு பதிவு செய்யவேண்டும் என அமலாக்க துறை கடிதம் எழுதி இருந்த நிலையில் வழக்கு பதிவு செய்யாமல் தமிழக காவல்த்துறை காலம் தாழ்த்தி வந்தது, இந்நிலையில் இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று Madras High Court உத்தரவிட்டுள்ளது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் இந்த மெகா ஊழலில், அந்த துறைசார்ந்த அமைச்சர் கே என் நேரு பெயர் சிக்கி இருக்கும் நிலையில் தமிழக அரசியலில் மிக பெரிய பூகம்பம் அடுத்தடுத்து அமலாக்க துறை நடவடிக்கைகள் மூலம் வெடிக்க இருக்கிறது. நகராட்சி துறையில் அரசு ஒப்பந்தங்களில் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கமிஷன் வசூலிக்கப்பட்டதாகவும், அது உறவினர்கள் மூலம் தனிப்பட்ட லாபமாக மாற்றப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், திமுக தலைவராக இருக்கும் முதல்வர் ஸ்டாலின், கட்சி நிதி மூலம் திருப்பிச் செல்லப்பட்டதாக கூறப்படும் தொகைகளில் நேரடி பயன் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. துணை முதல்வர் Udhayanidhi Stalin பெயரும் அரசியல் காரணங்களுக்காக எந்த முறைகேடு பணம் மூலம் நிதி பெற்றதாக அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் விமர்சனம் எழுந்துள்ளது.

மேலும் அமலாக்க துறை விசாரணையில், முதல்வர் அலுவலகம் மற்றும் டெண்டர் முறைகேடு, லஞ்ச வசூல் தொடர்பில் முக்கிய நபராக கூறப்படும் கவிபிரசாத் ஆகியோருக்கு இடையே தொடர்பு இருப்பதாகவும் அமலாக்கத் துறை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கடந்த 4 வருட திமுக ஆட்சில் பல்வேறு துறைகளில் முறைகேடுகள் தலைவிரித்து ஆடுகிறது. அப்படி திமுக ஆட்சியில் எந்தந்த துறையில் எவ்வளவு முறைகேடு நடந்துள்ளது என்று பார்க்கலாம், நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.888 கோடி முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. 2,538 பணியிடங்களில் குறைந்தது 150 இடங்களுக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் வாங்கப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.

நெல் கடத்தல் தொடர்பான முறைகேடில்,சிவில் சப்ளைஸ் கழகத்தில் ரூ.160 கோடி அளவிலான இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. டன் ஒன்றுக்கு ரூ.598 வழங்க வேண்டிய நிலையில், ரூ.186 மட்டுமே வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கழிப்பறை பராமரிப்பில் சென்னை மாநகராட்சியில் ரூ.364 கோடி அதிகப்படியான செலவினம் ஏற்பட்டதாகவும், தினசரி இருக்கை ஒன்றுக்கு ரூ.363.9 வரை செலவிடப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தின் நிலுவை கடன் ரூ.10.62 லட்சம் கோடி அளவை எட்டியுள்ளது என கூறப்படுகிறது முறைகேடாக கூறப்படும் தொகைகள் சேமிக்கப்பட்டிருந்தால்:

* மாநிலக் கடன் குறைக்கப்பட்டிருக்கலாம்

* பெண்களுக்கு உரிமை தொகை வழங்கப்பட்டிருக்கலாம்

* மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கலாம்

* இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டிருக்கலாம்

* பொங்கல் பரிசுத் தொகை உயர்த்தப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.