28 ஆயிரம் ஏமாற்றிய திமுக… 35 ஆயிரம் அள்ளி கொடுக்கும் NDA … மக்கள் யார் பக்கம்…

0
Follow on Google News

வரும் சட்டசபை தேர்தலில், பெண்கள் வாக்குகளை அறுவடை செய்வதில் திமுக கூட்டணி மற்றும் NDA கூட்டணி இரண்டு கட்சிகளுக்கு இடையில் எந்த கூட்டணிக்கு பெண்கள் வாக்குகள் பெருமளவு செல்லும் என்கிற விவாதம் அரசியல் களத்தில் அனல் பறந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2021 சட்டசபை தேர்தலின் போது, மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழக்கப்படும் , குறிப்பாக திமுக ஆட்சி அமைந்த உடனே இது அமல்படுத்த படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது.

ஆனால் 2021ல் ஆட்சி அமைத்த திமுக, ஆட்சிக்கு வந்த உடனே, தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போன்று மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் திமுக அரசு கொடுக்க வில்லை, தொடர்ந்து எங்கே தேர்தலில் கொடுத்த வாக்குறுதி போன்று 1000 ரூபாய் என மகளிர்கள் திமுக அரசை நோக்கி கேள்வி எழுப்ப, மேலும் எதிர்க்கட்சிகள் குற்றசாட்டுகளை முன் வைக்க, திமுக ஆட்சிக்கு வந்து பல மாதம் கழித்து மகளிர் உரிமை திட்டத்தை செயல்படுத்தியது திமுக அரசு.

ஆனால் திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போன்று ஆட்சிக்கு வந்த உடன், மகளிருக்கு 1000 ரூபாய் கொடுத்து இருந்தால், தகுதியான பெண்களுக்கு சுமார் முதல் 28 மாதங்களில் 28 ஆயிரம் கிடைத்து இருக்கும், ஆனால் தாமதமாக கொடுத்தான் விளைவு தகுதியான ஒவ்வொரு பெண்களுக்கும் 28 ஆயிரம் ரூபாய் கிடைக்காமல் ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது.

இந்நிலையில் NDA கூட்டணி சார்பில் எடப்பாடி பழனிச்சாமி வரும் சட்டசபை தேர்தலுக்கான பல வாக்குறுதிகளை அளித்து இருக்கிறார். அதில் பெண்களுக்கு மாதம் 2000 வழங்கப்படும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒருமுறை 10 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும், பட்ட தாரி இளைஞர்களுக்கு 2000 , பனிரெண்டாம் வகுப்பு வரை கல்வி முடித்தவர்களுக்கு ரூபாய் 1000 வழங்கப்படும், மீனவர்களுக்கு மீன்பிடி தடை கால உதவி ₹8,000 இலிருந்து ₹12,000 ஆக உயர்த்தப்படும்.

மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கூடுதல் ₹1,000 பணம். கைத்தறி மற்றும் மின்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சார அளவை தற்பொழுது இருப்பதை விட உயர்த்தி கொடுக்கப்படும், நகர்ப்புற தெருவோர வியாபாரிகளின் கூட்டுறவு வங்கி கடன்களுக்கு முழுமையான தள்ளுபடி செய்யப்படும் என பொருளாதார ரீதியாக தமிழக மக்கள் நலம் பெரும் வகையில் பல வாக்குறுதிகளை NDA கூட்டணி சார்பில் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

NDA கூட்டணியின் இந்த வாக்குறுதிகளின் அடிப்படையில், ₹10,000 குடும்ப உதவி + பெண்களுக்கு ஆண்டு ₹24,000 + ₹1,000 பொங்கல் தொகை என, ஒரு குடும்பத்திற்கு முதல் ஆண்டிலேயே ₹35,000 கிடைக்கும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள், அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் தமிழக பெண்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது.

மேலும் இதன் பின்னணியில் மாநிலத்தின் கடன் நிலை குறித்த விவாதமும் எழுந்துள்ளது. மத்திய அரசுடன் ஒருங்கிணைப்பு மற்றும் நிதி ஆதரவு முக்கியம் என்றும், அதை என்.டி.ஏ. கூட்டணியே வழங்க முடியும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் வரும் தேர்தலில் 1000 கிடைக்குமா.? அல்லது 2000 ஆயிரம் கிடைக்குமா.? என்பதெல்ல, வாக்குறுதிகளின் நம்பகத்தன்மை, அடிப்படையில் NDA கூட்டணிக்கே தமிழக பெண்கள் மத்தியில் அமோக ஆதரவு இருந்து வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் கடந்த தேர்தலில் ஆட்சியை பிடித்த ஒடனே மகளிருக்கு 1000 ரூபாய் தருவோம் என சொல்லி ஆட்சிக்கு வந்து 28 மாதங்கள் கழித்து தாமதமாக வழங்கிய திமுக மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது.