குடும்ப பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் எங்கே? கிராமசபை கூட்டத்தை அவசரமாக முடித்து எஸ்கேப் ஆன முதல்வர்..

0
Follow on Google News

சமீபத்தில் நடந்த உசிலம்பட்டி அருகேயுள்ள பாப்பாபட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அங்கு ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்தவர்களை திமுக அரசுக்கு எதிராக எதுவும் பேசக்கூடாது என்றும், தி.மு.க. அரசை பாராட்டி பேச வேண்டும் என்றும் பயிற்சி கொடுத்து வரிசையாக அமர வைத்திருந்தனர். அதன்படி மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த ஒரு பெண் எழுந்து பேசும் போது முதலமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளினார்.

அவரிடம் பேசிய முதலமைச்சர் தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பேருந்தில் இலவசம் என்று கூறினார். அப்போது மற்றொரு பெண் எழுந்து எங்கள் பகுதியில் இருந்து மதுரைக்கு செல்ல பேருந்தில் டிக்கெட் எடுக்க சொல்கிறார்கள் என்று கூறினார். இதனைக் கேட்டு ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்தார். இதன் பின்னர் சிலர் பேச முயன்றபோது அவர்களிடம் ஸ்டாலின் பெயர் கொடுத்த வர்கள் மட்டும் தான் பேச வேண்டும் என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து அவர்கள் தங்கள் கோரிக்கைகளை செவி கொடுத்து முதலமைச்சர் கேட்க வேண்டும் என்று சிலர் கூச்சல் போட்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த பெண்களை காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். காவல்துறையினரால் வெளியேற்றப்பட்ட பெண்கள்
58 கால்வாய் பிரச்சினை, டி.என்.டி. இட ஒதுக்கீடு போன்ற பிரச்சினை குறித்து கூட்டத்தில் பேச இருந்தோம். ஆனால் முதலமைச்சர் எங் கள் கோரிக்கைகளை செவி கொடுத்து கேட்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.

தொடர்ந்து கிராமசபை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் 5 மாதத்தில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம் என்று மார்தட்டி சொன்னார். இதைக்கேட்ட அங்கிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்ததோடு விடியா தி.மு.க. ஆட்சியில் புதிதாக என்ன திட்டத்தை நிறைவேற்றினார்கள். வாக்குறுதி அளித்தபடி முதியோர் ஓய்வூதியத்தை 1500 ரூபாயாக உயர்த்தி கொடுத்தார்களா?, குடும்ப பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் தந்தார்களா?

கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கினார்களா? என்று கேள்வி எழுப்ப ஆயத்தமாகினர். இதனால் முதலமைச்சர் விரைவாக கூட்டத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து அவசர அவரமாக புறப்பட்டு சென்றார். இதனால் முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்ற கிராமசபை கூட்டம் களையிழந்தது.