விஜய் சேதுபதியை நம்பி பல கோடி இழந்த பிரபல நிறுவனம்..! சினிமாவில் துடைத்து எறியப்படும் விஜய் சேதுபதி..

0
Follow on Google News

நடிகர் விஜய் சேதுபதி துணை நடிகராக தனது கலை பயணத்தை தொடங்கியவர்,சுமார் 8க்கு மேற்பட்ட படங்களில் ஒரு சில காட்சிகளில் முகத்தை காண்பித்து நடித்து வந்த விஜய் சேதுபதி, இதுக்கு மேல் சினிமாவில் தாக்கு பிடிக்க முடியாது என முடிவு செய்து வேறு ஒரு வேலைக்கு செல்லலாம் என முடிவு செய்தபோது, தென்மேற்கு பருவக்காற்று படத்தில் கதநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது, படமும் மிக பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தார்.

இந்நிலையில் தனது, இமேஜ்,படத்தின் கதை என எதை பற்றியும் யோசிக்காமல் பணம் கொடுத்தால் எந்த கதாபாத்திரத்தில் நடிப்பேன் என தொடர்ந்து நடித்து வருகிறவர், இவர் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படங்களில் சுமார் பத்துக்கு மேற்பட்ட படங்கள் இன்னும் திரைக்கு வராமல் படப்பிடிப்பு பணிகள் நடந்து வருகிறது, அந்த அளவுக்கு கற்று உள்ள போதே தூற்றி கொள் என்கிற பழமொழிக்கு ஏற்ப அவர் பணம் ஒன்றே குறிக்கோள் என செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இவர் கதநாயகனாக நடித்து கடந்த வருடம் வெளியான நான்கு படமும் படு தோல்வி அடைந்தது, இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கூக் வித் கோமாளி என்கிற நிகழ்ச்சி மிக பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து அதே போன்று நிகழ்ச்சியை தயாரித்து ஒளிபரப்ப முடிவு செய்த சன் டிவி அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பெரும் தொகையை சம்பளமாக பேசி நடிகர் விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்தது.

இந்த நிகழ்ச்சிக்காக கோடிக்கணக்கில் செலவு செய்து மிக பெரிய செட் அமைத்து மாஸ்டர் சீப் என பெயரிட்டு விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது, ஆனால் கூக் வித் கோமாளி நிகழ்ச்சியோடு ஒப்பிடும் போது 20 சதவிகிதம் கூட விஜய் சேதுபதி நிகழ்ச்சி பார்வையாளார்களை செற்றடையவில்லை என கூறப்படுகிறது, இது அந்த நிகழ்ச்சியை தயாரித்த சன் டிவிக்கு கோடி கணக்கில் நட்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய் சேதுபதியை நம்பி பல கோடி இழந்த சன் டிவி, மாஸ்டர் சிப் நிகழ்ச்சி தொடர்ந்து தயாரித்து ஒளிபரப்பினால் மேலும் தொடர் இழப்பு தான் ஏற்படும் என்பதால் இந்த நிகழ்ச்சியை பாதியில் நிறுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது, இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் தொடர் தோல்வியை சந்திக்கும் பட்சத்தில், இனி சினிமா துறையில் இருந்து விஜய் சேதுபதி துடைத்து எறியப்படலாம் என கூறப்படுகிறது.