பீகாரில் நடந்தது திமுகவுக்கும்… தயார் நிலையில் தமிழக பெண்கள்… NDA வுக்கு அதிகரிக்கும் பெண்கள் ஆதரவு…

0
Follow on Google News

பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த இந்திய அரசியலையே திருப்பி போட்டுவிட்டது என்று சொல்லும் வகையில், வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக முன் எப்போதும் இல்லாத வகையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பீகாரில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார், ஆனால் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் பலத்த அடி வாங்கி, பீகாரில் இருந்த இடம் தெரியாமல் போய் உள்ளது இந்தி கூட்டணி.

243 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய பீகார் மாநிலத்தில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க 122 இடங்கள் போதும் என்கிற நிலையில், 202 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்தி கூட்டணி வெறும் 35 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று பல இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. பிகர் தேர்தல் முடிவுகள் மூலம், பீகார் மக்கள் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

இந்த நிலையில் என்டிஏவின் இந்த மகத்தான வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் பீகாரில் உள்ள பெண் வாக்காளர்களே, என்டிஏ ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மதுவிலக்கு சட்டம், கிராமப்புற மற்றும் நகர்ப்புற பெண்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் நிதிஷ்குமார் முதல்வராக ஆட்சியில் 2007 முதல் பெண்களுக்கு சைக்கிள், கல்விக்கான உதவித் திட்டங்கள்,

அத்துடன் என்டிஏ கூட்டணி சார்பில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சுயதொழில் தொடங்குவதற்காக ரூ. 2 லட்சம் வரையிலான கடனுதவி மற்றும் முன்பணமாக ரூ. 10,000 வழங்கிய திட்டம் போன்ற அறிவிப்புகள் பெண்கள் மத்தியில் அவருக்கு அபரிமிதமான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பெண் வாக்காளர்களில் 71% பேர் என்டிஏ கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர், இது பெண்கள் மத்தியில் என்டிஏவுக்கான செல்வாக்கு அதிகரித்துள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

என்டிஏ கூட்டணிக்கு குறிப்பாக பெண்கள் மத்தியில் இருக்கும் ஆதரவை இந்தி கூட்டணியால் உடைக்க முடியவில்லை. ஆளும் கூட்டணியின் மீதுள்ள மக்களுக்கு இருக்கும் அதே நம்பிக்கையை எதிர்க்கட்சிகளால் பெற முடியவில்லை என்பதை இந்த பீகார் தேர்தல் முடிவுகள் தெளிவு படுத்தியுள்ளது. இந்நிலையில் பீகாரில் எப்படி பெண்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்று மீண்டும் என்டிஏ கூட்டணி ஆட்சிக்கு வந்ததோ அதே போன்று தமிழக பெண்கள் தான் வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் முக்கிய பங்காற்ற இருக்கிறார்கள் என்கிறது கருத்து கணிப்புகள்.

ஆனால் பீகாரில் ஆளும் கட்சியின் மீது இருந்த நம்பிக்கை தேர்தலில் எதிரொலித்தது, அதே போன்று, தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசின் மீது உள்ள பெண்களுக்கு இருக்கும் கோபம் மிக பெரிய அளவில் வரும் 2026 சட்ட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்க படுகிறது. பீகாரில் மதுவிலக்கு அமல் படுத்தப்பட்டு பெண்களின் நம்பிக்கை பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது என்டிஏ கூட்டணி.

ஆனால் தமிழகத்தில் திராவிட மாடல் என்கிற பெயரில் டாஸ்மாக் கடைகள் மூலம் வியாபாரத்தை பெருக்கி, குடி பழக்கத்தால் பெரும்பாலன தமிழக குடும்பம் சீரழித்து வருபவதற்கு காரணமாக இருக்கும் திமுக அரசின் மீது தமிழக மக்கள் குறிப்பாக தமிழக பெண்கள் கடும் கோபத்தில் இருக்கும் நிலையில், வரும் 2026 சட்டசபை தேர்தலில் பீகாரில் அதிக அளவுக்கு என்டிஏ கூட்டணிக்கு வாக்களித்தது போன்று தமிழகத்திலும் என்டிஏ கூட்டணிக்கு வாக்களித்து ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவார்கள் என்கிறது கருத்து கணிப்புகள்.

அந்த அளவுக்கு திமுக மீது தமிழக மக்களுக்கு இருக்கும் கோபம், என்டிஏ கூட்டணிக்கு ஆதரவாக தமிழகத்தில் திரும்பி வருவதாக கூறப்படுகிறது.