மகன் சஞ்சய்யை கண்டு கொள்ளாத விஜய்… கடவுள் போல் உதவிய அஜித்…. மகன் மீது அப்படி என்ன வெறுப்பு…

0
Follow on Google News

விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். அவரது இயக்கத்தில் விரைவில் சிக்மா என்ற திரைப்படம் வெளிவர உள்ளது. இந்த படத்தை லைகா புரொடக்சன் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜேசன் சஞ்சய்க்கு சொந்தமான ஜேஎஸ்கே மீடியா நிறுவனம் இந்த படத்தின் இணை தயாரிப்பை மேற்கொண்டுள்ளது. சிக்மா படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். தற்போது இந்த படம் குறித்தும் இயக்குனர் ஜேசன் சஞ்சய் குறித்தும் சினிமா வட்டாரத்தில் பலவிதமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஜேசன் சஞ்சய் அவரது படத்துக்கு சிக்மா என பெயர் வைத்திருக்கிறார். இந்த தலைப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை, கவனத்தை ஏற்படுத்தி உள்ளது.

இப்படி ஆங்கிலத்தில் தலைப்பு வைப்பது ஓடிடி தளங்களுக்கும் பான் இந்தியா படம் என்பதற்கும் வசதியாக உள்ளது. இந்த படத்தில் நடிகர் அஜீத் குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா பிஆர்ஓவாக இருக்கிறார். அவர் ஆரம்பத்தில் இருந்தே ஜேசனுக்கு உதவியாக இருந்து வருகிறார். இந்த படத்தை தயாரிக்க லைகா புரொடக்சன் தரப்பில் பைனான்ஸ் சிக்கல் ஏற்பட்டபோது சுரேஷ் சந்திராவுக்கு ஜேசன் போன் செய்திருக்கிறார். அங்கிள் படம் ரொம்ப லேட்டாகுது என்று பிரச்னையை சொல்லி இருக்கிறார்.

அப்போது சுரேஷ் சந்திராவுக்கு அருகில் இருந்த அஜீத்குமாரும் இதை கவனித்திருக்கிறார். உடனே போனை வாங்கி ஜேசனிடம் பேசிய அஜீத்குமார் பைனான்ஸ் பிரச்சனை குறித்து ஜேசனிடம் கேட்டுள்ளார். பிறகு ஏதாவது தயாரிப்பு பிரச்சனை என்றால் உடனே புரடியூசரை நானே உனக்கு ஏற்பாடு செய்து தருகிறேன் என்றும் அஜீத்குமார் கூறியிருக்கிறார். சினிமாவில் போட்டியாளராக கருதப்படும் விஜய் மகனுக்கு அஜீத்குமார் இப்படி ஒரு உத்தரவாதம் தந்திருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜயின் அம்மா ஷோபா ஒரு நேர்காணலில் பேசியபோது, அஜீத்குமார் விஜய் குடும்பத்தினர் நட்பாகவே உள்ளனர். குடும்ப நண்பர்களாக பலமுறை சந்தித்து பேசிக் கொள்கிறார்கள் என்றும் கூறியிருந்தார். அந்த வகையில் அஜீத்குமார் குடும்பத்தில் பழகக் கூடியவராக ஜேசன் சஞ்சய் இருந்து வருகிறார். மேலும் தனது புதிய படம் குறித்து ஜேசன் சொன்னதுமே சுரேஷ் சந்திராவை அவருக்கு மேனேஜராக வைத்துக்கொள்ளுங்கள் அனுப்பி வைத்ததே ஷாலினி தான் என்கின்றனர்.

விஜய் அஜீத்குமார் குடும்பங்களுக்கு இடையே உள்ள நட்பு அடிப்படையில் தான் சுரேஷ் சந்திரா, ஜேசன் இயக்கும் படத்தில் பணி புரிகிறார் என்றும் சொல்லப்படுகிறது. மாறாக அவர் எதிரி முகாமில் இருந்து வந்தவர் என்ற தவறான புரிதலும் ஒரு தரப்பு ரசிகர்களிடம் உள்ளது. ஆனால் அஜீத்குமார் விஜய் இருவருமே வௌிப்படையாக எதிர்ப்பு தன்மையை காட்டிக்கொண்டு இருப்பது சினிமாவில் வியாபாரத்துக்காக மட்டுமே தவிர தனிப்பட்ட பகை அவர்களுக்குள் இல்லை.

நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய மகனுக்கு பின்னால் இருந்து உதவும்போது விஜய் தன் மகனிடம் பேசுவது கூட இல்லை. அதனால்தான் அஜித்குமார் உதவியதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் இது ஒரு கட்டுக்கதை என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. தன்னுடைய முதல்படம் தன்னுடைய சுய முயற்சியால் நடக்க வேண்டும் என்பது சஞ்சயின் விருப்பமாக உள்ளது. ஒருமுறை சுதா கொங்கரா விஜய்க்கு போன் செய்து கதை சொல்ல வீட்டுக்கு வரவேண்டும் என்று கேட்டுள்ளார். விஜயும் அவரை வரச் சொல்லியுள்ளார்.

ஆனால் சஞ்சய்க்கு கதை சொல்லவே சுதா கொங்கரா வந்திருக்கிறார் என்று பிறகுதான் விஜய்க்கு தெரிந்துள்ளது. ஆனால் எனக்கு நடிக்க விருப்பம் இல்லை. படம் டைரக்‌ஷன் செய்வதில்தான் விருப்பம் என்று சுதா கொங்கராவிடம் ஜேசன் சஞ்சய் சொல்லிவிட்டார். அதனால் மகன் விருப்பத்துக்கு விஜய் குறுக்கே நிற்கவில்லை என கூறப்படுகிறது.