மதுரை பெஞ்ச் உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக INDI கூட்டணியைச் சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரை பதவி நீக்கம் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்துக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில், நீதிபதியே நேரடியாக திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீப துணை ஆய்வு செய்து, நியாமான தீர்ப்பை வழங்கிய நிலையில், நீதி துறைக்கு தலைவணங்கி தீர்ப்பை ஏற்று கொள்ள மனமில்லாத திமுக அரசு அந்த கூட்டணி கட்சிகளின் ஆதரவை திரட்டி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்கிற முயற்சியில் இறங்கி இருப்பது, நீதிபதிக்கு எதிரானவை என்பதை விட திமுகவின் இந்த செயல் ஒட்டுமொத்த இந்துக்களுக்கு எதிரானவை என்கிறார்கள் முருக பக்தர்கள்.
டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை தினம் அன்று மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என இரண்டு முறை நீதிமன்றம் உத்தரவிட்டும், திமுக அரசு மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை. தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சனை தலைவிரித்து ஆடி கொண்டிருக்க, அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதாத திமுக அரசு இந்துக்களின் உரிமையயை நிலைநாட்டும் வகையில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்கிற தீர்ப்புக்கு எதிராக தடை உத்தரவு வாங்க தொடர்ந்து தீவிரமாக வேலை செய்து வருவது, திமுக இந்துக்களுக்கும் எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது என்பது அப்பட்டமாக தெரிகிறது என மனவேதனை அடைகிறார்கள் முருக பக்தர்கள்.

முதலில் ஒற்றை நீதிபதி தீர்ப்பு, இரண்டு நீதிபதி, இப்படி தொடர்ந்து திமுக அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் இந்துக்களின் உரிமையை நிலைநாட்டும் வகையில் தொடர்ந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்க, உச்சநீதிமன்றம் வரை இந்த விவகாரத்தை திமுக அரசு எடுத்து சென்று இருக்கிறது.
கடந்து நூற்றாண்டுகளாக திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற இந்துக்கள் முயற்சி செய்வதும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்துவதும் தொடர்ந்து அரங்கேறி வந்த நிலையில், இதற்கு முன்பு வரை மலை மீது தீபம் ஏற்ற தடையாக இருந்தது வெவ்வேறு தரப்பினர் காரணமாக இருக்கலாம், ஆனால் இம்முறை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற தடையாக இருந்தது திமுக அரசு என்கிற குற்றசாட்டுகளை முன் வைக்கிறார்கள் முருக பக்தர்கள்.
திமுக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்து அறநிலை துறையின் செயல்பாடுகளால், இந்துக்களில் பார்ப்பரிய வழிபாட்டை நடந்த கூட நீதிமன்ற செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டு இருக்கிறது. தீபம் ஏற்றலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டும், திமுக அரசு அவசர அவசரமாக மேல்முறையீடு செய்வது, போலீஸ் தடுப்புகளை வைத்து தடுப்பது, நீதிமன்றம் CISF பாதுகாப்பு வழங்கி தீபம் ஏற்ற நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு அனுமதிக்காமல் தடுத்து இருக்கிறது திமுக அரசு.
இந்துக்களுக்கு எதிராக திமுகவின் செயல்பாடு புதிதல்ல,டெங்கு மலேரியா போன்று சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசியது, இந்து திருமண மந்திரம் குறித்து முதல்வர் முக ஸ்டாலின் இழிவாக பேசிய பேச்சுக்கள், திமுக எம்பி ஆ ராஜா பேசிய சர்ச்சை பேச்சு என இந்துக்களுக்கும் எதிரான கட்சி தான் திமுக என்பதை பல நேரங்களில் நிரூபித்து இருக்கும் திமுக ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டால் தான் தமிழ்கத்தில் இந்துக்களின் உரிமை நிலைநாட்ட படும் என முருக பக்தர்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.

