இத்தாலியில் பிறந்த சோனியா… போலியாக வாக்குரிமை பெற்ற விவகாரம்… நீதிமன்றம் அதிரடி…

0
Follow on Google News

இத்தாலியில் பிறந்த சோனியா காந்தி, 1968-ல் ராஜீவ் காந்தியை திருமணம் செய்தார். அதிகாரப்பூர்வமாக இந்திய குடியுரிமை பெற்றது 1983-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி தான். ஆனால் 1980-ல் நடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் ‘Sonia Gandhi’ என்ற பெயர் இடம் பெற்றிருந்ததாக புகார் எழுந்தது.அப்போதே தேர்தல் ஆணையம் இதை கண்டுபிடித்து 1982-ல் பெயரை நீக்கியது.

ஆனால் ‘குடியுரிமை இல்லாத போது வாக்காளர் பட்டியலில் பெயர் எப்படி வந்தது?’ என்ற கேள்வி இப்போது வரை மர்மமாகவே இருந்து வந்தது. டெல்லியைச் சேர்ந்த விகாஸ் திரிபாதி என்பவர் இதே கேள்வியை எழுப்பி, 2023-ல் டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ‘இது தேர்தல் மோசடி, போலி ஆவணம் தயாரித்தல், அரசு ஆவணங்களை தவறாக பயன்படுத்தல் உள்ளிட்ட குற்றங்கள்’ என்று சோனியா மீது FIR போடக் கோரினார்.

செப்டம்பர் 2024-ல் நீதிபதி வைபவ் சவுரஷியா இந்த மனுவை தள்ளுபடி செய்து, ‘ஏற்கனவே தேர்தல் ஆணையம் பெயரை நீக்கிவிட்டது, போதுமான ஆதாரம் இல்லை’ என்று கூறி வழக்கை முடித்துவிட்டார்.

இந்த நிலை​யில், இந்த விவ​காரம் தொடர்​பாக டெல்லி நீ​தி​மன்​றத்​தில் குற்​ற​வியல் சீராய்வு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இதனை சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே அமர்வு முன்பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நீதிப​தி, ‘‘இந்​திய குடி​யுரிமை பெறு​வதற்கு முன்​பாகவே வாக்​காளர் பட்​டியலில் பெயரை சேர்க்க போலி ஆவணங்​களை கொடுத்து மோசடி செய்​த​தாக சோனியா காந்தி மீது குற்​றம்​சாட்​டப்​பட்​டுள்​ளது.

அவர் மீது குற்​ற​வியல் வழக்​குப் பதிவு செய்​யக் கோரி தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள குற்ற​வியல் சீராய்வு மனுவுக்கு சோனியா காந்தி மற்​றும் டெல்லி காவல் துறை பதிலளிக்க கோரி நோட்​டீஸ் அனுப்ப உத்தரவிட்டது நீதிமன்றம்.

இந்நிலையில் கடத்த சில மாதங்களுக்கு முன்பு பாஜகவின் ஐ.டி. பிரிவு தேசிய தலைவர் தலைவர் அமித் மால்வியா,சோனியா காந்தி இந்திய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றது, தேர்தல் சட்டத்தை வெளிப்படையா மீறிய செயல் என கடுமையா சாடியிருக்கார் அமித் மால்வியா.. மேலும் சோனியா காந்தியின் பெயர் உண்மையான குடியுரிமைக்கான தேவையை பூர்த்தி செய்யாமல் வாக்காளர் பட்டியலில் இரண்டு முறை பதிவு செய்யப்பட்டது,

முதலில் 1980 இல் இத்தாலிய குடிமகனாகவும், பின்னர் 1983 ஆம் ஆண்டில் அவர் சட்டப்பூர்வமாக இந்திய குடிமகனாக மாறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பும் சேர்க்கப்பட்டது’ என அவர் மேலும் கூறினார். ராஜீவ் காந்தியை மணந்த பிறகு இந்திய குடியுரிமையை ஏற்க 15 ஆண்டுகள் ஆனது ஏன் என்ற கேள்வியையும் மால்வியா எழுப்பி இருந்தார்.

இந்த நிலையில் சோனியா காந்தி குடியுரிமை குறித்த விவகாரம் தொடர்பாக திரிபாதி தரப்பு தில்லி நீதிமன்றத்தில் குற்​ற​வியல் சீராய்வு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இது சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே அமர்வு முன்பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது திரிபாதியின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், “சில ஆவணங்கள் போலியாக உருவாக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். இதனால் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு பதிலாக இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ‘‘இந்​திய குடி​யுரிமை பெறு​வதற்கு முன்​பாகவே வாக்​காளர் பட்​டியலில் பெயரை சேர்க்க போலி ஆவணங்களைக் கொடுத்து மோசடி செய்​த​தாக சோனியா காந்தி மீது குற்​றம்​சாட்​டப்​பட்​டுள்​ளது. அவர் மீது குற்​ற​வியல் வழக்​குப் பதிவு செய்​யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்​ற​வியல் சீராய்வு மனுவுக்கு சோனியா காந்தி மற்​றும் தில்லி காவல் துறை பதிலளிக்க வேண்டும்” என்று கூறி நோட்​டீஸ் அனுப்ப உத்தர​விட்டுள்ளது மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.