கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு டெல்லியில் ஆஜரான விஜயிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றிருக்கிறது, அந்த விசாரணையில் எதற்காக விஜய் கரூர் கூட்டத்திற்கு தாமதமாக வந்தார் என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது, மேலும் கடந்த முறை விஜையிடம் கேட்ட அதே கேள்வியை இந்த முறையும் கேட்கப்பட்டு, கடந்த முறை சொன்ன பதிலும் இந்த முறை சொல்கின்ற பதிலும் ஒரே மாதிரியாக இருக்கா என்று சோதனை செய்திருக்கிறார்கள் சிபிஐ அதிகாரிகள்.
மேலும் விஜயிடம் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் உங்களுக்கு வேறு யார் மீது சந்தேகம் இருக்கின்றதா என்றும் கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது, அதற்கு விஜய் சில சந்தேகங்களை சிபிஐயிடம் எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது, இந்த நிலையில் விஜயிடம் சுமார் 93 கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது,

மேலும் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் தெரிவிக்கும் பதில்களும் நான்கு கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் விஜய் தெரிவிக்கும் ஒவ்வொரு பதிலுக்கும் அவரிடம் கையொப்பம் பெற்றதாக டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறது, இந்த நிலையில் கரூர் சம்பவத்தின் பொழுது விஜய் பேசிய பஸ் அருகில் ஏ, பி , சி, டி என்று ஒரு குறிப்பிட்ட சில நபர்கள் மார்க் செய்யப்பட்டு,
இவர்கள் தான் கரூர் சம்பவத்திற்கு குழப்பத்தை ஏற்படுத்தினார்களா என்கின்ற கோணத்திலும் சிபிஐ விசாரணையை தொடங்கி இருக்கிறது, மேலும் இந்த கரூர் விவகாரத்தில் இறுதி கட்ட விசாரணையாக செந்தில் பாலாஜி குறி வைத்து தூக்கப்பட்டு விசாரணை வளையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளார், இதற்கு முக்கிய காரணம் விஜய் தரப்பிலிருந்து நடத்தப்பட்ட சிபிஐ விசாரணையில்,
செந்தில் பாலாஜியை கையை காண்பித்து விட்டு சில தகவல்களையும் சிபிஐயிடம் விஜய் தரப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது, மேலும் விஜய் நிகழ்ச்சி நடந்த இடத்தில் பத்து ரூபாய் பாலாஜி என்று பாடல் பாடிய போது அவரை நோக்கி செருப்பு வீசப்பட்ட வீடியோவையும் விஜய் தரப்பிலிருந்து சிபிஐயிடம் ஒப்படைத்து, செந்தில் பாலாஜியின் ஆட்கள்தான் இவர்கள் என்று குறிப்பிட்டதாக டெல்லியில் உள்ள மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் சுட்டிக் காட்டுகிறார்.
இந்த நிலையில் சுமார் இதுவரை 1200 பக்கங்கள் சார்ஜிட் இந்த கரூர் சம்பவம் தொடர்பாக தயாராகி விட்டது என்றும், மேலும் அடுத்தடுத்து செந்தில் பாலாஜியிடம் நடத்தப்படும் விசாரணையை தொடர்ந்து, மேலும் சில பக்கங்கள் இந்த ஜார்ஜிடில் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது, அந்த வகையில் இந்த ஜார்ஜிட் சமர்ப்பிக்கும் பொழுது தான், கரூர் விவகாரத்தில் யார் முதல் குற்றவாளி , யார் இரண்டாம் குற்றவாளி, யார் மூன்றாம் குற்றவாளி என்பது வெளி உலகத்திற்கு தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் சிபிஐ விசாரணை வளையத்திற்குள் செந்தில் பாலாஜி கொண்டு வந்துள்ள அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடந்த முறை சி பி ஐ விசாரணைக்கு சோகத்துடன் சென்று சோகத்துடன் திரும்பிய விஜய் , இம்முறை சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியே வரும் போது காரில் கையசைந்த கொண்டு மகிழ்ச்சியுடன் வந்ததை பார்த்து, சி பி ஐ விசாரணை விஜய்க்கு சாதகமாக தான் இருந்திருக்கிறது , அந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடு தான் இது என்றும் கூறப்படுகிறது.
மேலும் அடுத்த சில நாட்களில் , அதாவது தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவுக்கு முன்பே , கரூர் தொடர்பான இதுவரை நடத்திய சிபிஐ விசாரணையின் அடிப்படையில் , மிக பெரிய அளவில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

