மேற்கத்திய நாடுகள் இதற்கு முன்பு இந்தியாவை ஆயுதங்களால் தாக்கி அவர்களுக்கு அடிமைப்படுத்தி வைத்திருந்தது வரலாறு. வியாபாரம் என்கின்ற போர்வையில் வந்த கிழக்கிந்திய கம்பெனி, பொருளாதார ரீதியில் இந்தியாவை அடிபணியச் செய்து இந்தியர்களை அடிமை படுத்தி வைத்திருந்தது என்பது வரலாறு.
கிழக்கிந்திய கம்பெனிக்கு சவால் விடும் நோக்கில் சுதேசி இயக்கம் மூலம் தன்னுடைய சொத்துக்களை எல்லாம் விற்று கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார் பிள்ளையை ஆயுதங்களால் வெள்ளையர்கள் அளிக்கவில்லை, பொருளாதார ரீதியாக தாக்குதல் நடத்தி அவரை முற்றிலும் முடக்கினார்கள் என்பது வரலாறு. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார் பிள்ளை என்கிற ஒரு தனி மனிதனுக்கு எதிராக அன்று மேற்கத்திய நாடுகள் நடத்திய பொருளாதாரப் போர், இன்று ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் எதிராக அதே யுக்தியை கையாண்டு இருக்கிறது அமெரிக்கா.

சுதந்திரத்திற்கு முன்பு வியாபார செய்கின்ற போர்வையில் உள்ளே வந்த கிழக்கிந்திய கம்பெனிகள் ஒட்டுமொத்த இந்தியாவின் செல்வங்களை கொள்ளையடித்தது மட்டுமல்லாமல், இந்தியர்களை அடிமைப்படுத்தி அவர்களிடம் கையேந்தும் சூழலுக்கு கொண்டு வந்தனர். வெள்ளையர்களுக்கு எதிரான போராட்டம், ரத்தம் சிந்தி, வேர்வை சிந்தி, சிறைச்சென்று ஏன் உயிரவே தியாகம் செய்து இந்த தேசத்திலிருந்து வெள்ளையர்களை விரட்டி சுதந்திர காற்றை சுவாசித்த வரலாறு இந்தியர்களின் வரலாறு.
மேலும் நாங்கள் வெளியேறி விட்டால் இந்தியாவால் என்ன செய்ய முடியும் என்று சவால் விட்டுச் சென்ற வெள்ளையர்கள் மூக்கில் விரலை வைக்கும் அளவிற்கு கடந்த 75 ஆண்டுகளில் இந்தியா கட்டி எழுப்பிய சாம்ராஜ்யம் உலக வல்லரசு நாடுகளுக்கு இணையாக உருவெடுத்து இருக்கிறது . ஆனால் 75 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு இந்திய நாடுகளின் எண்ண ஓட்டம் எந்த மாதிரி இருந்ததோ, அதே மாதிரி தான் தற்பொழுதும் உள்ளது.
அந்த வகையில் இந்தியாவின் எழுச்சியை உடைத்து மீண்டும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடாக ஆக்க வேண்டும் என்பதற்கான ஒரு திட்டம்தான் தற்பொழுது இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா கொடுத்துள்ள பொருளாதாரம் போர் என்கிறது உலக நாடுகள். ஆனால் இந்தியா ஆங்கிலேய ஆட்சிகளில் துண்டு துண்டாக உடைக்கப்பட்டு பிரித்தாலும் சூழ்ச்சி போல் தற்பொழுது இல்லை,
ஒரு ஒரு வலுவான தலைமைத்துவம் கொண்ட நாடாக பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா உலக நாடுகளுக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கிறத காலம் இது. போக்ரான் அணுகுண்டு சோதனை போது அமெரிக்கா விதித்த பொருளாதார தடையை உடைத்து மீண்டு எழுந்து வந்த இந்தியா, கோவிட் காலத்திலையும் பொருளாதாரத்தில் தன்னம்பிக்கையோடு நின்றது.
குறிப்பாக மேற்கத்திய நாடுகளால் இந்தியா கடந்த காலங்களில் கற்றுக் கொண்ட பாடம் இனியும் மேற்கத்திய நாடுகளுக்கு வளைந்து கொடுத்து சரணடையும் சூழலில் தற்போது இல்லை என்பதை பிரதமர் மோடி நிரூபித்து வருகிறார். அந்த வகையில் அமெரிக்க இந்தியாவுக்கு எதிராக நடத்தியுள்ள இது வர்த்தகப் போர் அல்ல மீண்டும் பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவை அடக்குமுறைக்கு உள்ளாக்க முயற்சிக்கும் நாகரீக யுக்தி தான் இது என்றும். ஆனால் இதற்கெல்லாம் இந்திய அடிபணியாது என்று இந்தியா மீது அமெரிக்க நடத்தி வரும் வர்த்தக போருக்கு பிரதமர் மோடியின் ராஜதந்திர அரசியல் தக்க பதிலடி கொடுத்து வருவதையும் பார்க்க முடிகிறது.

